கனடா தொரண்டோ நகரில் புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 ஆகிய நாள்களில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் பொழுது பின் வருமாறு விருதுகள் வழங்கப் பெறும். தகுதியானவர்கள் தங்கள் தகைமை குறித்த விரவங்களை அனுப்பலாம். பிறரும் தக்கவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அனுபப் வேண்டிய மின்வரி thamizh.kazhakam@gmail.com

1. இலக்குவனார் விருது

தொல்காப்பியத்தைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்களுக்கும் தொல்காப்பியம் குறித்த ஆராய்ச்சி நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டடவர்களுக்கும் இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் எனப் போற்றப்பெறும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பெயரில் இலக்குவனார் விருதுகள் வழங்கப்பெறும்.

2. தொல்காப்பியச் சுடர் விருது

தொல்காப்பியர் புகழையும் தொல்காப்பியத்தையும் பல்வேறு வகைகளில் பரப்பி வருவோருக்கும் அமைப்பினருக்கும் தொல்காப்பியச் சுடர் விருதுகள் வழங்கப் பெறும்.

3. தொல்காப்பிய நன்மணி விருது

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் கட்டுரை அளிக்கும் தொல்காப்பிய ஆர்வலர் ஒவ்வொருவருக்கும் தொல்காப்பிய நன்மணி விருது வழங்கப் பெறும்.

விருது பெற விரும்புவோர் தங்களின் பணி குறித்த குறிப்புகளுடன் பெயர், முகவரி, மின்வரி, பேசி எண் ஆகிய விவரங்களையும் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்துடன் thamizh.kazhakam@gmail.com என்னும் மின்வரிக்கு வைகாசி 17, 2055/ 30.05.2024 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

இரு பக்க ஆய்வுச் சுருக்கம் tolcanada@gmail.com மின்வரிக்கு வந்து சேர வேண்டிய நாள் 01.05.2024 இற்கு முன் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எழுத்து மூலமாக நீட்டிப்பு கேட்பவர்களுக்கு 10-5-2024(சித்திரை 27) வரை காலம் நீடிக்கப்படும். கருத்தரங்கம் தொடர்பான பிற விவரங்களை https://www.tolkappiyam.ca இணையத் தளத்தில் காண்க. ஐயப்பாடு இருப்பின் 9884481652(இலக்குவனார் திருவள்ளுவன்) எண்ணிற்குத் தொடர்பு கொள்க.

இலக்குவனார் திருவள்ளுவன்                                  முனைவர் செல்வநாயகி

ஒருங்கிணைப்பாளர்                                                   தலைவர்

இலக்குவனார் இலக்கிய இணையம்                    தொல்காப்பிய மன்றம், கனடா

https://www.facebook.com/watch/?mibextid=oFDknk&v=859229232634552&rdid=87T1eZ41fWZexdvn


குறிப்பு : கலைஞர் தொ.கா. வேந்தர் தொ.கா., தமிழன் தொ.கா. மதிமுகம் தொ.கா., செம் தொ.கா., 5 அலைவரிசை தொ.கா., புதிய தலைமுறை தொ.கா., வெளிச்சம் தொ.கா., குமுதம் ஊடகம், தினமணி, தினமலர், தமிழ் இந்து, மேலும் செய்தியாளர் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து ஊடகத்தினருக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி.