வணக்கத்திற்குரிய நவம்பர் 27
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!
கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர்
களங்கம்வாராத தீரமும்
கன்றாத படைமையும் குன்றாத துணிவும்
நலிவிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத நட்பும்
தவறாத சொல்லும்
தாழாத எழுச்சியும் மாறாத புகழும்
தடைகள் வாராத செயலும்
தொலையாத பற்றும் கோணாத தலைமையும்
துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும்
இணைந்து வாழ்ந்த மாவீரர்கள்
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

ஆகா! ஆகா!! செம்மையாக இருக்கிறது ஐயா! இன விடுதலைக்காக உயிரை ஈந்த நம் புலிப் போராளிகளின் பெருமைகள், உயர்குணங்கள் அனைத்தையும் ஒரே பாடலில் பட்டியலிட்டுக் காட்டி விட்டீர்கள். இதற்கு அபிராமி அந்தாதிப் பாடலின் வடிவை நீங்கள் தேர்ந்தெடுத்தது சிறப்பு! கருத்துப் பொருத்தம், வடிவப் பொருத்தம் மட்டுமல்லாமல் இறை வணக்கப் பாடலான இதைத் தாங்கள் தேர்ந்தெடுத்ததன் மூலம் தெய்வத்துக்கு இணையானவர்கள் நம் மாவீரர்கள் என்பதையும் மறைபொருளாய் உணர்த்துகிறீர்கள்! அருமை ஐயா!