சாதியும் சமயமும் – ஒரு பன்மய விவாதம் சேலத்தில் முழுநாள் கருத்தரங்கம்!
“சாதியும் மதமும் – ஒரு பன்மய விவாதம்” என்ற தலைப்பில்,
சேலத்தில் சித்திரை 05, 2046 / ஏப்பிரல் 18, 2015 சனிக்கிழமை
முழுநாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெறுகின்றது.
மாரி தலம், ஆக்கம், நிழல், தளிர்கள், ஐந்திணை வாழ்வியல் நடுவம், சேலம் பேச்சு ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விவாத நிகழ்வு, சேலம் மூக்கனேரி ஏரிப் பகுதியிலுள்ள, மாரி தலத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது.
காலை 10 மணி முதல் 10.30 மணிவரை தனி மனித உரிமையில் சாதி, மதங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தப்படுகின்றது. அதன் பிறகு காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் முதல் அமர்வில், “மதமும் சூழலியலும்” என்ற தலைப்பில், சூழலியலாளர் திரு. வீ. நக்கீரன் அவர்களும், “சாதியும் இந்தியச் சூழலும்” என்ற தலைப்பில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் த.செ. கொளத்தூர் மணி அவர்களும் உரையாற்றுகின்றனர்.
நண்பகல் உணவு இடைவெளிக்குப் பிறகு, 1.30 மணி முதல் 3.30 மணிவரை நடைபெறும் இரண்டாம் அமர்வில், “மதமும் கல்வியும்” என்ற தலைப்பில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு அவர்களும், “மதமும் பெருநிறுவனங்களும்” என்ற தலைப்பில் ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) வழக்கறிஞர் சுரேசு அவர்களும் உரையாற்றுகின்றனர்.
பின்னர், தேநீர் இடைவேளைக்குப் பிறகு, மாலை 4 மணி முதல் 6 மணிவரை நடைபெறும் மூன்றாம் அமர்வில், “இயற்கை வழிப்பாடு” என்ற தலைப்பில், சூழலியல் ஆர்வலர் திரு. பியுசு மனுசு அவர்களும், “சாதியும், தமிழகச் சூழலும்” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களும் உரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்!
தொடர்புக்கு :
பாலா – 72994 28570, விசயன் – 73588 87896, உமாசங்கர் – 99940 49612,
சாந்தகுமாரி – 088676 10511, விக்கிரம் – 98427 95197
Leave a Reply