தலையங்க விமரிசனம் – 100 ஆவது அமர்வு
அன்புடையீர்,
பொருள்: நிகழ்ச்சி அறிவிப்பு – அழைத்தல்
வணக்கம். தலையங்க விமரிசனம் என்ற பெயரில் கடந்த 2043 மார்கழி 8 /2012ஆம் ஆண்டு திசம்பர் 23 முதல் வாரந்தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வுகளில் இதழாளர்கள், செய்தியாளர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் பங்கேற்று அந்த வாரத்தில் முதன்மை நாளேடுகளில் வெளிவந்த தலையங்களில் காணப்படும் செய்திகள், கருத்துக்களைத் திறனாய்வு செய்து உரையாற்றுவது வழக்கம்.
ஊடகத்துறையில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டத்தில் செய்தியை அணுகுவது குறித்து இதில் கருத்துரை வழங்கப்படுகிறது. மேலும் தலையங்கங்களில் கூறப்படும் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இதன் நூறாவது வார அமர்வு வரும் ஐப்பசி 30, 2045 / 16.11.2014 அன்று நடைபெற உள்ளது. தலையங்க விமரிசனத்தின் நூறாவது அமர்வில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்ற உள்ளார். முன்னதாக, மறைந்த வரலாற்றுப் பேராசிரியர் எம்,எசு.எசு.பாண்டியன் அவர்களின் படத்தினைத் திறந்துவைக்க உள்ளார்.
மேலும், ”சமூக மாற்றமும் ஊடகங்களும்” என்ற தலைப்பில் முன்னணி ஊடகவியலாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தலையங்க விமரிசனக் குழு சார்பாக,
அன்புடன்,
வே.சோதி ராமலிங்கம்,
ஒருங்கிணைப்பாளர்
தலையங்க விமரிசனம்
100 ஆவது வார அமர்வு – வரலாற்றுப் பேராசிரியர்
எம்.எசு.எசு.பாண்டியன் படத்திறப்பு – கருத்தரங்கம்
நாள் : ஐப்பசி 30, 2045 / 16.11.2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 – 8.00 மணி
இடம்: கமலாம்பாள் திருமண மண்டபம்
ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, அரும்பாக்கம்
(வைணவா கல்லூரி எதிரில்), சென்னை – 600106
நிகழ்ச்சி நிரல்
மாலை 5.00 மணி – கருத்தரங்கம் – பொருள் : ஊடகமும் சமூக மாற்றமும்
வரவேற்புரை : கு.தமிழரசன், செய்தியாளர், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி
தலைமையுரை : நெல்சன் சேவியர், விவாத ஒருங்கிணைப்பாளர், சன் செய்திகள்
உரையாற்றுவோர்:
ஊடகமும் நடுநிலையும்: தான் அசோக், எழுத்தாளர்
ஊடகமும் சமூகநீதியும்: சீவசகாப்தன்,விவாத நெறியாளார்,இமயம் தொலைக்காட்சி
ஊடகமும் தமிழ்நாட்டுரிமையும்: கா.எழிலரசன், ஊடகவியலாளர்
நன்றியுரை : ச.மணிகண்டன், செய்தியாளர், சன் செய்திகள்
மாலை 6.45 மணி – படத்திறப்பு: கி.வீரமணி, ஆசிரியர், விடுதலை
மாலை 7.00 மணி – தலையங்க விமரிசன அமர்வு
வரவேற்புரை : பி.இளங்கோ சுப்பிரமணியன், அரசியல் விமர்சகர்
தலைமையுரை: மு.குணசேகரன், முதுநிலை ஆசிரியர், புதியதலைமுறை தொலைக்காட்சி
நினைவேந்தல் உரை: கி.பாபு செயகுமார், துணைஉள்ளுறை ஆசிரியர், தி நியூஇந்தியன் எக்சுபிரசு
கருத்துரை: கி.வீரமணி, ஆசிரியர், விடுதலை
நன்றியுரை: வேயுறுதோளிபங்கன், ஆசிரியர்(ஆங்கிலம்), வாய்சு ஆஃப் ஓபிசி
சிறப்பு அழைப்பாளர்கள் :
க.செயகிருட்டிணன், ஆசிரியர், வளர்தொழில்
இரா.ச.சுவாமிநாதன், பொதுமேலாளர், சத்தியம் தொலைக்காட்சி
வி.எம்.சுப்பையா, சிறப்புச் செய்தியாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி,
செயல் தலைவர், தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம்
அ.செல்வராசு, சிறப்புச் செய்தியாளர்,
டைம்ஸ் ஆப் இந்தியா, பொதுச் செயலாளர், இந்திய பத்திரிகையாளர் சம்மேளனம்
ப.இரகுமான், முதுநிலை உதவி ஆசிரியர், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி
மு.அசீப்பு, ஊடகவியலாளர், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்
Leave a Reply