தை 14, 2047 / சனவரி 28, 2016

azhai_ilakku_sanavari2016

 

இலக்கு –

இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு!

அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை!

சிந்தனை விரும்பிகளின் பட்டறை!

தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு.

2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டிலிருந்து  சிரீ கிருட்டிணா  இனிப்பக நிறுவனத்துடன்  இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறது.

2014 ஆம் ஆண்டு மூளையே மூலதனம்
2015 ஆம் ஆண்டு  சிகரம் நம் சிம்மாசனம்

என்கிற மையத் தலைப்புகளின் கீழ், மாதம் ஒரு புதுத் தலைப்போடு சந்தித்து, சிந்தித்து, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டது.
அந்த வகையில் –

2016 ஆம் ஆண்டு முயற்சியே உன் முகவரி

என்ற மையத் தலைப்புடன் இலக்கு உங்களைச் சந்திக்க வருகிறது.
தொடர்ந்து உங்களின் மேலான  அறிவுரைகளையும், வாழ்த்துகளையும் எதிர்பார்த்து, காத்திருக்கிறது.

முத்திரை-இலக்கு :muthirai_ilakku