பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி)   பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க!   பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…

முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்

தை 14, 2047 / சனவரி 28, 2016   இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து  சிரீ கிருட்டிணா  இனிப்பக நிறுவனத்துடன்  இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…

‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:       உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046  / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…