சட்டச் சொற்கள் விளக்கம் 391-400: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 391-400
391. Accompanied by a copy of a record, it shall be | ஆவணப்படி யுடன் இஃது இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாதுரையில் அல்லது எதிர் வாதுரையில் உரிய ஆவணத்தின் படி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். |
392. Accompany | உடன்செல் பின்தொடர் இணை சேர் இணைந்து செயலாற்று கூட்டாளியாக அல்லது துணையாகச் செல்லல் அல்லது இசைத்தல் அல்லது இயங்குதல். |
393. Accompany deafness | செவிட்டுத் தன்மை உடனிணைந்த செவித்திறன் குறைபாடு உணர்வு நரம்பு காதுகேளாமை, கடத்துவகை காதுகேளாமை, கலப்புவகை காதுகேளாமை என மூவகைப்படும். காது கேளாமைக்கும் வாய் பேச இயலாமைக்கும் தொடர்பு உண்டு. சில நேர்வுகளில் செவித்திறன் இருந்தும் வாய் பேச இயலாமல் இருக்கலாம். செவித்திறன் குறைபாடுடன் கூடிய வாய் பேச இயலாமையை இங்கே குறிப்பிடுகிறது. |
394. Accompanying letter | உடனிணைப்பு மடல் மற்றோர் ஆவணத்துடன் அல்லது அஞ்சலுடன் இணைத்துத் தரப்படும் மடல். |
395. Accomplice | உடன்குற்றவாளி உடந்தையன் குற்றத்துணையாளி; குற்ற உடந்தையாளர் குற்றம் புரிபவருக்கு அல்லது புரிபவர்களுக்கு அக்குற்றச்செயலில் உதவியாக அல்லது உடந்தையாக இருப்பவர். இ.த.ச.,பிரிவு 133 |
396. Accomplice witness | உடந்தைச்சான்றர் அறிந்தோ தானாக முன்வந்தோ மற்றவர் அல்லது மற்றவர்கள் செய்யும் சட்டப்படியான குற்றச் செயலில் அவர்களுடன் ஒத்துழைத்து உதவுபவர் அல்லது உடந்தையாக இருப்பவர் அளிக்கும் சான்றே உடந்தையர் சான்று. [இந்தியச் சான்று சட்டம் 1982, (The Indian Evidence Act, 1872) பிரிவு 133] குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு எதிரான தக்க சான்றுரைஞராக உடந்தைச்சான்றர் இருப்பார். witness என்பது சான்றையும் குறிக்கும், சான்று கூறுபவரையும் குறிக்கும். |
397. Accomplish | நிறைவேற்று செயலாற்று ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பவர் |
398. Accomplished fact | மெய்யறி நிகழ்ச்சி ஐயமிலி நிகழ்ச்சி முன்னரே உண்மை என மெய்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சி. ஐயத்திற்கிடமில்லாத மெய்யென்று அறியப்பட்ட நிகழ்ச்சி. |
399. Accord | இசைவளி ஒப்பந்தமளி, பொருத்தம், இணக்கம் ஒத்திசைவு; உடன்பாடு உடன்படிக்கை ஒப்பந்தம் (குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 6 அ/6A of the Citizenship Act 1955) |
400. accord and satisfaction | ஒத்திசைவும் உளநிறைவும் ஒப்பந்தத் தரப்பார் இருவரிடையே, நடைமுறைப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக மாற்றுச் செயலாக்கத்தினை ஏற்பதற்கான உளநிறைவான உடன்பாடு. மற்றவருக்கு எதிரான உரிமையை அல்லது பாத்தியதையை ஏற்பதற்காக ஒன்றைக் கொடுக்கவும் ஏற்கவுமான உளநிறைவான உடன்பாடு என்றும் சொல்லலாம். உளநிறைவு/மன நிறைவு என்பதைப் பொந்திகை என்றும் குறிப்பர். திருப்தி பிற மொழித்தழுவல் சொல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply