சட்டச் சொற்கள் விளக்கம் 411-420: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 401-410 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி
சட்டச் சொற்கள் விளக்கம் 411 – 420
411. according to that | அதற்கிணங்க அதற்கேற்ப ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கேற்ப நடைமுறைப்படுத்துவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது. |
412. Accordingly | இங்ஙனமே/அங்ஙனமே இதன்படியே/அதன்படியே இவ்வாறே/அவ்வாறே இவ்வண்ணமே/அவ்வண்ணமே ஒருவர் தன்னுடைய வரம்பை அறிந்து அதற்கேற்பச் செயற்படுவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது.. |
413. Accost | அணுகு அணுகிப் பேசு தனிப்பட்ட பாதுகாப்பிற்கு எதிராக உடனடி உடல் தீங்கு ஏற்படும் அல்லது குற்றச் செயல் நிகழ உள்ளது என்ற பேரச்சம் விளைவிக்கும் பாங்கில் அணுகிப் பேசுதல். |
414. account | கணக்கு பற்றுவரவைக் காட்டும் கணக்கு. கணக்கு என்பது,1) விலைப் பட்டி. 2)வணிக நடவடிக்கைகளைப் பதிதல். 3) வங்கிவைக்கும் பற்று வரவுக் கணக்கு. 4) ஒரு முகமையகத்திலிருந்து அதன் வாடிக்கையாளர் பெறும் கழிவு. 5) ஆண்டுக் கணக்கு என்பனவற்றைக் குறிக்கிறது. நிறுவனங்கள், வங்கி, அமைப்பு, பல நிறுவனங்களில் பதிவுகளைப் பேணுவது கணக்கு ஆகும். நாம் math(emetic)s என்பதையும் கணக்கு என்பதால் குழப்பங்களும் நேர்கின்றன. இதனைக் கணிதம் என்றே சொல்லலாம். எண்கணக்கு(Arithmetic), குறிக்கணக்கு(இயற்கணிதம்/Algebra), வடிவியல் (வடிவக்கணிதம் / Geometry), முக்கோணவியல்(Trigonometry) முதலியனவே கணிதமாகும். தமிழில் கணக்கு என்பது நூல் ஓதுவதைக் குறிக்கும். அதனால் கணக்காயர் என்பது ஆசிரியரைக் குறிக்கிறது. கணக்காயர் மகனார் நக்கீரனார் என்பதே சான்று. இவ்வாறான பொருள் விளக்க வழக்கம் இப்போது இல்லை. எனவே, கணக்கு- account; கணிதம்- math(ematic)s என்றே வகைப்படுத்திக்கொள்ளலாம். |
415. account book | கணக்கேடு கணக்குப் புத்தகம் கணக்குகள் பேணப்படுகின்ற புத்தகம், பேரேடு. பணப்பதிவேடு – பணம் பெறுகை, கொடுக்கை மட்டும் பதியப்படும் பேரேடு. பொதுப்பேரேடு – அனைத்து நிதிப் பரிமாற்றங்களையும் குறிக்கும் ஏடு. கடனாளிப் பதிவேடு – கடன் விற்பனை குறித்த தகவல்களைப்பதியும் ஏடு என மூவகையாகக் குறிப்பர். பற்று வரவுக் கணக்குகள் பதிவே முதன்மைக் கணக்கேடாக இருப்பினும் துறைகளுக்கேற்ப கணக்கு வகைகளும் பேணப்படும். 1.)சொத்துகள், 2.) பொறுப்புகள்,3.)செலவுகள், 4.)வருமானங்கள், 5.)பங்குகள் என வணிக நிறுவனங்கள் இவற்றிற்கான கணக்கேடுகளைப் பேணும். 1.) நடப்புக்கணக்கு, 2.) சேமிப்புக் கணக்கு, 3.) சம்பளக் கணக்கு, 4.) நிலை வைப்புக் கணக்கு, 5.) தொடர் வைப்புக் கணக்கு, 6.) தாயகத்தில் குடியிரா இந்தியர் கணக்கு, என அறுவகைக் கணக்கேடுகளை வங்கிகள் பேணுகின்றன. 1.) பெரு நிறுவனக் கணக்கு, 2.) பொது நிறுவனக் கணக்கு, 3.) அரசுக் கணக்கு, 4.) குற்றவியல் கணக்கு, 5.) தணிக்கைக் கணக்கு, 6.) பணியாட்சிக் கணக்கு, 7.) வரிக்கணக்கு என்றும் பேணப்படும். இவ்வாறு துறைகளின் தன்மைக்கேற்பக் கணக்கேடுகள் மாறி அமையும். |
416. account code | கணக்கு விதித் தொகுப்பு கணக்குக் குறியீடு கணக்கு விதிகளைத் தொகுத்துத் தரும் நூல். கணக்குகளின் விளக்கப் படத்தை உருவாக்க ஒரு கணக்கிற்கு வழங்கப்படும் குறியீட்டு எண். |
417. account contra | எதிர்க் கணக்கு இக்கணக்கின் இயல்பான இருப்பு என்பது தொடர்புடைய கணக்கிற்கு எதிரானது என்பதால் எதிர்க்கணக்கு என்கின்றனர். பொதுப்பேரேட்டில், தொடர்புடைய கணக்கின் மதிப்பைக் குறைப்பதைக் குறிப்பதாகும். இதனை முரண் கணக்கு என்றும் சொல்வர். |
418. account current | நடப்புக் கணக்கு நடப்பு கணக்குகள் நிறுவனங்கள் வழக்கமான பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்டவை. நிறுவனங்கள் பேணுவதற்காக நடப்புக் கணக்கு பயன்படுகிறது. |
419. account deposit | வைப்புதொகைக் கணக்கு குறுங்காலம் அல்லது நெடுங்காலம் எனக் குறிப்பிட்ட காலத்திற்குப் பணத்தை வைப்புத் தொகையாகச் செலுத்தும் கணக்கு. திங்கள்தோறும் குறிப்பிட்ட தொகையை வைப்பில் வைக்கும் தொடர் வைப்புக் கணக்கும் உள்ளது. |
420. account for | காரணங்கூறு கணக்குக் கொ கணக்குக்காட்டு ஒருவருக்கோ ஒன்றனுக்கோ நிகழ்ந்த ஒன்றிற்கான அல்லது கணக்கு வழக்கு நிலைமைக்கான காரணங் கூறும் பொறுப்பு. [இந்திய ஒப்பந்தச் சட்டம்(பிரிவு 196), குடி பெயர்வுச்சட்டம்(பிரிவு 27 இ(c)(2)., சான்றுச்சட்டம்(பிரிவு 114) முதலியவற்றில் பொறுப்புடைமை குறித்து இடம் பெற்றுள்ளன.] |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply