(சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

511. Acknowledgement of Signatureகையொப்ப ஒப்புகை  
தொகை பெறுபவர் ஒப்புகை  
நிறைவேற்றத்தை ஒப்புக் கொள்வதை உறுதிப்படுத்தும் கையொப்பம்.  

கொடுக்கப்பட்ட ஆவணத்தில், குறிப்பிடப்படுபவர் கையொப்பத்தைச் சான்றுறுதியர்(notary)  சரிபார்த்து உறுதிப்படுத்தல்.
512. Acknowledgment Of A Right  உரிமை ஒப்புகை  

மறு தரப்பாருக்குரிய உரிமையை ஒப்புக் கொள்ளுதல்.
  
513. Acmeமுகடு  
முடி
உச்சி
நிறைவெய்திய நிலை.

  கிரேக்க மொழியில் மலை முகடு எனப் பொருள். எனினும் ஆங்கிலத்தில் இப்பொருளில் கையாள்வதில்லை. மாறாக, ஒருவர் புதிய பணியில் சேரும் பொழுது அவரது பணிவாழ்வில் அஃது உச்சத்தைத் தொடுகிறது எனக் குறிக்கிறோம். நோய் நெருக்கடியையும் இது குறிக்கும்.
514. Aconiteமுயற்சியின்றிப் பெறல்

நச்சுச் செடிவகை, நஞ்சு.  

நேர் பொருள் இவ்வாறிருப்பினும் வழக்கில் என்ன பொருளில் கையாள்கிறோம்?   பண்டைய காலத்தின் பிற்பகுதியில், இதன் மூலக் கிரேக்கச் சொல் akonit́ī  என்பதன் பொருள் ‘தூசியில்லாமல்’ என்பதாகும். இதனால், போராட்டமின்றி அல்லது முயற்சியின்றிப் பெறுவதைக் குறிக்கிறது.
515. Acousticஒலிக்குரிய  
கேள்வி கேட்டல்  
ஒலிசார்   அலைகளாக நகரும் காற்றழுத்தத்தின் சிறிய மாறுபாடுகளைக் குறிக்கிறது.

ஒலியியல் ஆயுதங்கள், அதிக அளவிலான ஒலியை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவர் அல்லது பலரின் செவித்திறனை இடைக்காலமாகவோ நிலையாகவோ சீர்குலைக்கும் ஆயுதங்கள் ஆகும்.  

காண்க: Acoustics
516. Acousticalஒலியியல்

சார்தன்மை
ஓசைப் புலனைச் சார்ந்த  
காண்க: Acoustic
s
517. Acousticsஒலியியல்  
கேட்பொலியியல்  

ஒலியின் உற்பத்தி, கட்டுப்பாடு, பரிமாற்றம், வரவேற்பு. விளைவுகள் ஆகியவற்றைக் கையாளும் அறிவியலாக ஒலியியல் வரையறுக்கப்படுகிறது.

ஒலியியல் என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு.

ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார்.      ( விக்கிபீடியா)
518. acquaintஅறிமுகர்  
அறிமுகமானவர்
பழக்கமானவர்
பழக்கப்படுத்து
அறிமுகமாக்கு.  
புதியதாகப் பழக்கமான ஒருவர்.
519. acquaintanceஅறிமுகம்  
பரிச்சியம், அறிமுகமானவர்.

அறிமுகமாயிருத்தல்
பழக்கமானவர்
 
முதன்முதலில் பார்த்த ஒன்றை / ஒருவரை மறுமுறை பார்க்கும்போது, ஏற்கெனவே பார்த்த உருவத்துடன் அந்த உருவத்தை ஒப்பிட்டு இது / இவர், அது / அவர் தான் என்று அறிந்து கொள்வதே பரிச்சியம் ஆகும்.

பார் (=அறி) + இசை (=ஒப்பு, பொருத்தம்) + இயம் = பரிச்சியம் = ஒப்பு / பொருத்தம் அறிதல். பரிச்சியம் என்ற தமிழ்ச்சொல்லே பரிச்சயம் என்று திரிந்து வழங்குகின்றது எனச் சொல்லாய்வாளர்கள் சிலர் சொல்லுகின்றனர்.
520. Acquaintedதெரிந்தவை

ஒருவரை அல்லது ஒன்றைப்பற்றி அறிந்திருத்தல்.

பழக்கத்தின் காரணமாக அறியவோ தெரியவோ வருதல்.

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்