(வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி)

தீங்கிழைக்கும் தீயவன் அல்லது தீயவள் குறித்த அளவுகடந்த பேரச்சம் தீயர் வெருளி.
தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பவர்களைக் கண்டு வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் தீய பாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தும் பேரச்சத்திற்கு ஆளாவர். பொறாமையால் அல்லது பழி வாங்குவதற்காகத் தனக்குச் சூனியம் வைப்பதாக அல்லது மந்திரத் தகடு வைப்பதாக எண்ணியும் பிறர் மீது வெறுப்பும் சினமும் கொண்டு அஞ்சுவர்.
00

தீச்செய்தி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீச்செய்தி வெருளி.
தேர்வில் தோல்வி, தேர்தலில் தோல்வி, உறவினர் மரணம், கூட்டாளி மோசடி செய்து ஓட்டம், கடை தீப்பற்றி எரிதல், வெள்ளத்தால் பயிர் நாசம் என்பன போன்ற தீயச் செய்திகள் ஆள்மூலம் அல்லது தொலைபேசி மூலம் அல்லது குறுந்தகவல், பகிரித் தகவல் மூலம் வரும் எனப் பேரச்சம் கொள்வர். தீங்கு நேரும் என எதிர்பார்த்தும் தீய செய்தி குறித்து அது வரும் முன்னரே அளவுகடந்த அச்சம் கொள்வர். தீய செய்தி வந்தாலும் அ்தை எதிர்கொள்ள முயலாமல் மனம் கலங்கி மேலும் துயரம் வரும் எனப் பேரச்சம் கொள்வர். சிலர் நோய்வந்தால் மருத்துவரைப் பார்த்தால் ஏதும் தீரா நோய் இருப்பதாகச் சொல்வாரோ எனக் கவலைப்பட்டு அவரைச் சந்திக்கவும் அஞ்சுவர்.
00

தீத்தடுப்புப் பயிற்சி குறித்த வரம்பற்ற பேரச்சம் தீத்தடுப்புப் பயிற்சி வெருளி.
பள்ளியில் முதலுதவி வகுப்பில் தீத்தடுப்புப் பயிற்சிஅளிக்கும் பொழுதே உண்மையில் தீப்பற்றியுள்ளதாகக் கருதி அஞ்சுவர். தீத்தடுப்புப் பணியில் சேர்ந்த சிலருக்கும் இதுபோன்ற பேரச்சம் வருவதுண்டு.
தீத்தடுப்புப்பயிற்சியின் பொழுது தீக்காயம் ஏற்படுமோ தீயால் பாதிப்பு ஏதும் வருமோ என்று தேவையற்ற அச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00

  1. தீப்பெட்டி வெருளி – Spirtophobia

தீப்பெட்டி குறித்த வரம்பற்ற பேரச்சம் தீப்பெட்டி வெருளி.
தீக்குச்சி அல்லது தீப்பெட்டி தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தீப்பெட்டி வெருளி.
சூட்டில் தீக்குச்சி தானாகப் பற்றிக்கொண்டு விடும், கவனக் குறைவால் வேறு எதிலும் தீப்பற்றிப் பரவி அ்ழிவு ஏற்படுத்தும் என்பனபோன்ற தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாவர்.
00

தீய கனவு / நள்ளிரவுக் கனவு(nightmare) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தீய கனவு வெருளி.
kakos என்றால் தீய என்று பொருள். oneiros என்றால் கனவு என்று பொருள்.
கனவு வெருளி(Oneirophobia)யுடன் தொடர்புடையது. ஆனால் கனவு வெருளி நல்ல கனவுகள் தொடர்பானது.
காண்க: அணங்கு வெருளி
00