(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,22,பொதுவறு சிறப்பின் புகார் பிற்பகுதி தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றம் பேரவைத் தலைவராக, எனப் பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர். கா. கோவிந்தனார் அவர்கள்,

தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்று, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதினத்தாரின் “புலவரேறு” பட்டம், தமிழக அரசின் “திரு. வி. க. விருது”, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் “தமிழ்ப்பேரவைச் செம்மல்.” பட்டம் போன்ற சிறப்புகளையும் பெற்ற புலவர் அவர்களின் தமிழ்ப்பணி பொன்விழாக் கண்ட பெருமையினையுடையது.