தமிழ்க்குடில் நடத்தும் தமிழர் விளையாட்டு விழா

  அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் என்னும் சிற்றூரில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். நடத்தபடும் விளையாட்டுப் போட்டிகள்: 1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 3. அறிவுசார்ந்த…

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது – தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  திருமலை   அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்’ என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டார். தில்லி சவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா.அறவேந்தன் நூல்களைப் பெற்றுக்கொண்டு முதன்மையுரையாற்றினார்.   விழாவில் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை …

சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல

 கொல்லப்பட்டவர்கள் பற்றிய  சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது பேரினச் சிங்களவாத அரசு கடந்த 30 ஆண்டுகளாக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த  இனப்படுகொலையின் போது, நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   மேலும் தமிழர் பகுதிகளை  வன்முறையில் கவர்ந்துள்ள சிங்களப்படை தமிழர்களின் நிலங்களைக் கவர்ந்தும்  மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை  அரங்கேற்றி வருகிறது. உலக நாடுகளும் இதுகுறித்துக் கட்டுப்பாடற்ற உசாவல் நடத்த வேண்டும் வற்புறுத்தி வருகின்றன.

ஒரு கையில் ஓசை எழுப்பும் மாணாக்கியர் சௌசன்யா

   ஆந்திர மாநிலம் நிசாமாபத்தில்  சௌசன்யா என்னும் பொறியியல் மாணாக்கி, ஒரு கை ஓசை எழுப்பி கின்னசு அருவினையேட்டில் இடம்பெற விரும்புகிறார்.   நிசாமாபாத்து நகரில்,  சூரியநகர் பகுதியைச்  சேர்ந்த  பொறியியல் கல்லூரி ஒன்றில்,இளம்தொழில்நுட்பவியல்(பி.டெக்.) படித்து வருபவர் பாப்பா சவுசன்யா(Pabba Soujanya)இவர், தன் கையைத் தானே, உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி, ஓசையை எழுப்புகிறார்.  திசம்பர் 25 அன்று, தீட்சப்பள்ளியில்(Dichpally) அலுவலர்கள் முன்னிலையில் இவர், தன் அருவினையை நிகழ்த்திக்காட்டினார்.  அப்பொழுது 4 நிமையம் 56 நொடிகளில் 1,150 தடவைகள் ஒற்றைக்கையால் தட்டி…

10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் : இராமதாசு

    10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும்  சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசயா என்ற மனநலம் தாக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். உதவியற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதிமன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும்,கருணையும் பாராட்டப்பட வேண்டியவை.   விசயாவைப்…

கை வீசம்மா கை வீசு! – இளவல்

கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! ஆடை வாங்கலாம் கை வீசு!…

நீதான் கண்ணே அழகு! – அன்பு

  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும்….

என் தாய்

–    திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329     தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன்  தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே   குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்!   செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்!  உனக்கிலை ஒருவரு மீடே!   பற்பல தெய்வம் படைத்தன ரெனினும்  பண்புடை தாய்முதற்  தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய்  நல்லறப் பேற்றினால் பெற்றேன்!   வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின்   விழைவது அம்மையே…

மாமூலனார் பாடல்கள் – 7 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6. உதியஞ்சேரலைப் பாடியவர் போல் மகிழ்க! வாழ்க! – தோழி கருத்திற்கினிய காதலனை மணக்க விரும்பினாள் தலைவி.  பெற்றோர்கள் குறுக்கே நின்றனர். தலைவியை அவள் பெற்றோர்கள் அறியாமல் அழைத்துச்சென்று மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் தோழி முறையிட்டாள். தலைவன் வழியின் கொடுமையைக் கூறிக் காலம் தாழ்த்தான். ஆயினும் தோழியின் வற்புறுத்தலுக்கு இணங்கி அழைத்துக்கொண்டு போவதாக உறுதி கூறிவிட்டான். அம் மகிழ்ச்சிச் செய்தியைத் தலைவியிடம் தோழி கூறுகின்றாள். தோழி: மகிழ்க! வாழ்க! தலைவி : என்ன? நம் துன்பம் தொலையும் நாள் வந்ததா?…

தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 3

(முன் இதழ்த் தொடர்ச்சி) – இலக்குவனார் திருவள்ளுவன் பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் போலி ஆரியரதமிழிசையைப் புறக்கணிப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். அனந்தகிருட்டிணசர்மா என்பார்,’ தியாகையர் பாடலகள் இலக்கிய நயம் உடையன அல்ல. தியாகையர் பாடலுக்குத் தமிழர்களாலேயே முதன்மைகொடுக்கப்பட்டடது….

தொல்காப்பிய விளக்கம் – 7 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா.   ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும்.   காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று.   33. அன்புஇறந்து  உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென  மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.     உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய…