மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்

அரங்கக்கூட்டம்:   மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்     கார்த்திகை 6, 2045  – 23 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை | மாலை 4.30 மணி – இக்சா அரங்கம் (4ஆவது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரே ,எழும்பூர் ,சென்னை   தோழர்களுக்கு ,   வணக்கம்!     கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர்…

தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள்

  தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள் தேனிமாவட்டத்தில் கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக அரசு அலுவலகங்கள் முடங்கிப்போனதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் உள்ள வருவாய்த்துறை, ஊர் நிருவாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை என அனைத்து அலுவலகங்களிலும் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளியை ஒட்டி அரசு விடுமுறைகள் வாரத்தில் இடையில் வந்ததால் அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக விடுமுறைபோட்டுவிட்டுத் தங்கள் சொந்தப் பணிக்குச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் தீபாவளி முடிந்த பின்னரும் மொகரம் முதலான பல…

செஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி

(ஐப்பசி 23, 2045 / நவம்பர் 09, 2014 தொடர்ச்சி) 21. கச்சத்தீவும் சீனர்களின் சப்பானிய எதிர்ப்பும்   சீன நண்பர்கள் சிலருடன் பேசும் போது, அவர்கள் தமது நாட்டிற்கு யாரை போட்டியாளர்களாகக் கருதுகின்றனர் எனக் கேட்டேன். வெகு சிலரே வட அமெரிக்கா என்றனர். ஒரு சிலர், இரசியா என்றுகூடச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவைப் பற்றி கேட்டால், பலருக்கு ஒன்றும் தெரியவில்லை. இங்கே, தமிழகத்தில், வங்க தேசம்தான் நமக்கு சவால் விட்டு வளரும் நாடு என்று சொன்னால் நாம் எப்படி சிரிப்போம்? அதே போலத்தான்,…

ஆதலினால் காதல் செய்வீர் – (உ)ருத்ரா

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே இறந்துவிழ. சிறுபயல் பிய்த்திட்ட‌ பாவை நான்…