அரசியல் ஆத்திசூடி – இராமசெயம்

அனைத்திலும் அரசியல் அறிந்திடு ஆதிக்க உணர்வை வெறுத்திடு இல்லாதோர்க்காய் உழைத்திடு ஈகைக் குணத்தை வளர்த்திடு உண்மை உழைப்பைப் போற்றிடு ஊழல் சூழல் போக்கிடு எளிமை நெறியைக் கற்றிடு ஏளனம் செய்தல் மறந்திடு ஐக்கிய மாதல் உரைத்திடு ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு ஓய்தல் நீக்கிச் செயல்படு ஓளடதம் நீயென எண்ணிடு அஃதே அரசியலென மாற்றிடு. – க.இராமசெயம் http://www.rmsudarkodi.blogspot.in/    

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்

(அதிகாரம்   003. நீத்தார் பெருமை தொடர்ச்சி)          001 அறத்துப் பால்        01 பாயிர இயல் அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்                     ‘சிந்தனையும், சொல்லும், செயலும்          தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்   சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)      ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?         சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,         வளமும் நலமும் வே[று]இல்லை.   அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,       மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.        அறத்தைவிட, நல்லதும், அதனை         மறத்தலைவிடக், கெட்டதும்,…

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் மொன்றியல் கிழக்குப் பகுதியில் கடந்த ஆடி 02, 2046 / 18-07-2015 அன்று பலநாடுகள் பங்குகொண்ட பல்கலை நிகழ்வு 2015 (Quebec City Festivals and Events) நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 5 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களின் கலை, பண்பாட்டினை பல்லின மக்களோடு பரிமாறும் பொருட்டு, கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் வருடா வருடம் பங்குகொண்டு பல கலை நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது. ‘Festival d’été de Québec’ என்னும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 2 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) 2   தொல்காப்பியர்காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத்தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140).  ‘அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது.  விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன.  பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன’ என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி ‘ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்’ (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார்….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 003. நீத்தார் பெருமை

(002. வான்சிறப்பு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல்          அதிகாரம்   003. நீத்தார் பெருமை              துறவியரது, சான்றோரது ஆற்றல்கள்,          அறவியல் பண்புகள், பெருமைகள். ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும், பனுவல் துணிவு.    ஒழுக்கநெறி நின்று, துறந்தார்தம்        பெருமையை நூல்கள் போற்றட்டும். துறந்தார் பெருமை துணைக்கூறின், வையத்(து), இறந்தாரை எண்ணிக்கொண்(டு) அற்று.      துறந்தார் பெருமையை, உலகில்        இறந்தாரை எண்ண இயலாது. இருமை வகைதெரிந்(து), ஈண்(டு)அ)றம் பூண்டார் பெருமை, பிறங்கிற்(று) உலகு.      நல்லன,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 002 வான்சிறப்பு

(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல் 002. வான்சிறப்பு உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்      மழையின், பயன்களும் சிறப்புக்களும். வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான், தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.      உலகையே நிலைக்கச் செய்வதால்,        மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத், துப்(பு)ஆய தூஉம், மழை.   உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,          உணவாக ஆவதும் மழைதான். விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து), உள்நின்(று) உடற்றும் பசி.    மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து…

பல்பொருள் ஆய்வரங்கம்

ஆடி 9, 2046 / சூலை 25, 2015  மாலை 3.00 எழும்பூர், சென்னை தோழர் தியாகு   + அ. அருள்மொழி   + கு.பா. பிரின்சு  கசேந்திரபாபு + பேராசிரியர் தா. அபுல் பாசல்  + மு. வீரபாண்டியன் +  வே.பாரதி – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் 9865107107

புல்மேல் விழுந்த பனித் துளியே! – பவளசங்கரி

புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் என்னை எழுப்பிய வெண்பனியே ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய் கல்லை உருக்கிய கவிமழையே கனவில் நிறைந்த கற்கண்டே உயிரில் கலந்த இன்னிசை போல் உனக்குள் தானே உறைந்திருந்தேன் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய்…

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா? – இளையவன் செயா

கல்விபடைத்த காமராசரை வாழ்த்துவோம்! பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ? புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள்  வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில்  கருவறையில் தொழுது  வணங்கத் தொகுத்த மொழியும்  நல்ல முழுத்தத்தில்  முடித்த மணமும்…