தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை – பொழிவு 1

ஆவணி 14, 2046 / ஆக. 31, 2015 பி.ப.2.30 வணக்கம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 81 ஆவது  துறையாகவும் மூன்றாவது தமிழ்த்துறையாகவும்  உருவாக்கம் பெற்றுள்ள “தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகைத் துறையில்” நடைபெறவுள்ள முதல் நிகழ்விற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன். சங்கர நாராயணன்.கி உதவிப் பேராசிாியா் சங்கப் பலகைத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) 2   தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது :  “இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக…

‘சென்னை நாள்’ குறித்து வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் பங்கேற்கிறேன்.

ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் ‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர்

ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 மாலை 5.30 கி.வெங்கட்ராமன் பெ.மணியரசன் தமிழ்த்தேசியப் பேரியக்கம்  திருச்சிராப்பள்ளி

வைகோவிற்கு அழகல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

வைகோவிற்கு அழகல்ல!     உலக மக்களால் போற்றப்படும் மக்கள் நலத்தலைவர் வைகோ. அவரது கடும் உழைப்பும் விடா முயற்சியும் வாதுரைத்திறனும், அநீதிக்கு எதிரான போராட்டக் குணமும் மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்படுகின்றன. ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துத் தமிழின உணர்வாளர்களின் நெஞ்சில் இடம் பதித்துள்ளார். இருப்பினும் அவர் புகைச் சுருள் (cigarette) விற்பனை தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது பண்பிற்கு ஏற்றதல்ல! அவருக்குப் பெருமை சேர்ப்பதுமல்ல!   மது விலக்கு வேண்டிப்போராடும் வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் அவரின் மகன் புகைச்சுருள் முகவராக உள்ளதுபற்றிக் கேட்டதற்குத் தான்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.   இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…

இரண்டகர்களை அடையாளம் காட்டுங்கள்! – வெளிப்படையான மடல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தமிழ் இனத்தின் சார்பில் திறந்த மடலாக வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்:   தோல்வி என்பது வெற்றிக்கான முதற்படியே. அதுவே முடிவல்ல. தமிழீழ மக்கள் சந்திக்காதவையல்ல, நீங்கள் சந்தித்திருப்பது. ஆகவே தொடர்ந்தும் தமிழீழ மக்களுடன் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக செயல்படுங்கள். இவ்வளவுகாலமும் சம்பந்தனும், சுமத்திரனும் மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் செய்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இனி வரும்காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு கூட்டமைப்பு தமிழீழ மக்களிற்கு வஞ்சகங்கள் செய்யும்போது கூட்டமைப்பின் உண்மை முகத்தை…

காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3

(ஆடி 31, 2046 / ஆக.16, 2016 தொடர்ச்சி) 3  கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் மேய்க்கால், புறம்போக்கு என்று தனியாக நிலமிருக்கும். அது ஊருக்குப் பொதுவானது. அதில் ஆடு, மாடுகளை மேய்த்திருப்பார்கள். அது மாதிரியான நிலங்களை இப்பொழுது பலரும் கவர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஊர் நாட்டில் மேய்க்க முடியாது. காட்டிலும் மேய்க்கத் தடை. இப்படியே இருந்தால் கடலிலும் சந்திரமண்டத்திலத்திலேயும்தான் ஆடுகளை மேய்க்க முடியும். இதன் தொடர்பாகப் பலமுறை மத்திய, மாநில மந்திரிகளிடம் நேரிடையாக மனுக்கொடுத்துள்ளோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.  இதன் தொடர்பாகத்…

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 6 – மறைமலை இலக்குவனார்

 “திராவிடமொழியின் தொன்மையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்” என்னும் அறிஞர் கால்டுவெல் (திரா. ஒப். – ப. 106) கூற்றினையும் தம் கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். திராவிடமொழிகள் பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச்சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக ஆய்ந்து நிறுவிய அறிஞர் கால்டுவெல் “பழந்தமிழ்தான் இவையனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர்” (பழந்தமிழ் – ப. 67) என வருந்தும் பேராசிரியர், “அவர் அவ்வாறு கூறாது போயினும், அவருடைய ஆராய்ச்சி…