ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்!

ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்! தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும். பள்ளித் தாளாளர் பேச்சு   தேவகோட்டை:  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமைப் பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி   அகோமு (AGM) அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  மனோகரன்  பங்கேற்றார்.  இவர்,தமிழ்வழிக் கல்விப்பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறும் என்று பேசினார்.    முகாமிற்கு…

முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை

 ஆனி 07, 2047 /  சூன் 21, 2016 மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு நூல் வெளியீடு

திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு – எழுத்தாளர் ஓவியா

ஆனி 02, 2047 / சூன் 16, 2016 பெரியார் நூலக வாசகர் வட்டம்,சென்னை திராவிடத்தால் எழுந்தோம்! திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு பொழிவு 4    

திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம்

  திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம் ஆனி 05, 2047 / சூன் 19, 2016 சிறப்புப்பொழிவு : தொல்காப்பியச் சான்றோர்  பேரா. இ.சூசை தலைப்பு  : தொல்காப்பிய வாழ்வியல்

நான்தான் கடவுள்! – ஆரூர் தமிழ்நாடன்

நான்தான் கடவுள்! நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! நம்ப மறுக்கும் நண்பர்க ளேஎனைக் கூர்ந்து பார்த்தால் கும்பிடு வீர்கள்! எங்கும் நான்தான் இல்லா திருக்கிறேன்; எங்கும் ஆசையாய் இறைந்து கிடக்கிறேன்; மழையோ வெயிலோ மயக்கும் பொழுதோ மனமொன் றாமல் மரத்துத் திரிகிறேன்; வாழ்வின் மகிழ்வை வசீகர சுகத்தை உணர்ந்து நெகிழ ஒருபொழு தில்லை; வலிகள் என்று வருந்திய தில்லை; நிறைவென நெஞ்சம் நெகிழ்ந்ததும் இல்லை; நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! இசைக்கென உயிரும்…

தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா

தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா    பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பரமேசுவரி, தினமலர் பட்டம் சார்பாக நடைபெற்ற பட்ட அவை(சபை) நிகழ்வுக்குத் தேர்வு பெற்று  சென்னையில் (வைகாசி 23, 2047 / சூன் 05,2016 அன்று) நடைபெற்ற பட்டஅவை(சபை) நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ், புத்தகங்களைப்   பரிசாகப் பெற்றார். திரு.நல்லகண்ணு, திரு.இரவிக்குமார், தினமலர் துணை ஆசிரியர் திரு.கிருட்டிணமூர்த்தி  ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.    மறுநாள் (வைகாசி 24, 2047 / சூன் 06, 2016 அன்று) பள்ளியில்…

சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு

சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு         தேவகோட்டை –    தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்துப்பாடல்களையும் பாடிய  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்திரி, கார்த்திகேயன், இரஞ்சித்து, தனலெட்சுமி, பார்கவிஇலலிதா, கண்ணதாசன், இயோகேசுவரன், தனம், இராசலெட்சுமி, சௌமியா ஆகியோருக்குத்  தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் சிவநெறிச் செல்வர் பேரா.சொக்கலிங்கம், பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள்.   மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரியை…

சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!   சங்குவாரி தோட்ட  ஐந்து காணித் தேயிலைத்தோட்டத்தைக் கம்பளை நகரவை எடுத்துக்கொண்டது.  இங்கே குப்பைக் கூளக் கூடம் அமைக்க ஏற்பாடு செய்து அதன் முதற்கட்டமாக காணி அளவிடலுக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் இத்திட்டத்துக்கு எதிராகவும் சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்.     இது குறித்து முன்னால் உடப்பளாத்தப்பகுதி அவையின் உறுப்பினர் எசு.செல்லமுத்து அவர்களினால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கும் மத்திய மாகாண அமைச்சர் இராமேசுவரன் அவர்களின் கவனத்திற்கும்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி)   பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க!   பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…

வாழ்க்கைச்செலவு கொடுப்பனவில் குழப்ப வேண்டா!

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 10.000உரூபா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருவதைக் குழப்ப வேண்டா!  – மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன்     பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 6000.00உரூபா போதாது என்பது நான் அறிவேன் அதற்கு  மாநிலக்கல்வியமைச்சர் என்ற வகையிலும் மலைய மக்களின் வாக்குபலத்தில்  பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையிலும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் முறையாகச் செய்து வருகின்றேன் அதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றேன் இடையில் இதனைக் குழப்பும் வகையில் செயற்பட வேண்டா! அறிக்கையும்…