கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்

  முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி.  அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது  அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன்  நேயர்களிடமிருந்து  நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற  அமைதியில் அமிழ்ந்துவிட்டன.     அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. புலால் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 12. புலால் விலக்கல் புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும். புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்? அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை….

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 – முனைவர். ப. பானுமதி

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்!     கவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின், பெருமை பேசுவதோ, சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த, விவேகம் நிறைந்த, எழுச்சி மிகுந்த கருத்தால் சிறுமையைக் களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தைக், குறிப்பாக இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக் கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்….

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29 1.4.  தலைவர் வாழ்த்து பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர். அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 212) அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது.  இதனைச்,  ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்   பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்று தொல்காப்பியர்…

அ.இ.த.எ.சங்கம் : இலக்கிய உறவுகள் திருவிழா, சென்னை

     மலேசியாவிலிருந்து வருகை புரிந்துள்ள ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் திரு. க. அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு மன்னர் மன்னன் மருதை அவர்களுக்கும் வைகாசி 31, 2047 / 13.06.16 திங்கள் கிழமை மாலை நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறோம்.   ஆதிரை முல்லை

தாய்க்குலத் தாரகை தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு, சென்னை

  ஆனி 01, 2047 / சூன் 15, 2016  உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை ஈப்போ ஔவைப் பணிச்செல்வி தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு  -புலவர் இளஞ்செழியன்  

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்!     அரசியலாளர்களுக்கும் பிறருக்கும்  உள்ள இலக்கணமே வாக்கு  மறப்பதுதானே! இதைச் சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? நான் அந்த வாக்கினைக் கூறவில்லை. ஆனால் இந்த ‘வாக்கு’ மறப்பதும் இன்றைய மக்களின் இலக்கணம்தான்; எனினும் கூறித்தான்  ஆக வேண்டியுள்ளது.   தேர்தல் முறைக்கு முன்னோடிகள் தமிழர்கள்தாமே!  பரமபரை முறை இல்லாமல் வாக்களித்து நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கும்  மக்களாட்சி முறைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்தாமே! ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அனைவரும் ‘வாக்கு’ என்ற சொல்லையே மறந்துவிட்டனர் போலும்!  யாரும் வாக்கு…

தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்!   பெயர்களை இரு மொழிகளில் ஒரே நேரம் குறிப்பிடுவோர் உலகில் நாம் மட்டுமாகத்தான் இருக்கிறோம். பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு அதை அப்படியே தமிழில் குறிப்பிடும்பொழுது நமக்கு இழுக்கைத் தருகிறது என்பதை உணரத் தவறுகிறோம். பொதுவாக, தந்தை பெயர் அல்லது  தாய்பெயர் அல்லது  பெற்றோர் பெயர் அல்லது ஊர்ப்பெயர் முதலானவற்றின் முதல் எழுத்தையே நம் தலைப்பெழுத்தாக இடுகின்றோம்.  கதிரவன் மகன் நிலவன் என்னும் ஒருவர் தன் தந்தையின்  முதல் எழுத்தை ஆங்கிலத்தில்  குறிப்பிட்டுத் தன் பெயரைக் கே.நிலவன்…

தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்!     தமிழ் ஆர்வத்தின் காரணமாகப் பலர் தமிழ் அமைப்புகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நிகழ்ச்சிகள் நடத்துவதில் மனநிறைவு கொள்வோரும் தற்பெருமை அடைவோரும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்கள்,  தமிழைத் தொலைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை உணரவில்லை.   தமிழன்பர்கள் எனில், பிற மொழிக்கலப்பை அகற்ற வேண்டுமல்லவா? பிறமொழி எழுத்துகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைக்குத் தமிழ் விழாக்கள் நடத்துவோரில் மிகப் பெரும்பான்மையர்,  பெயர்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; தலைப்பெழுத்துகளில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்;  நிகழ்விடம், பணியிடம், முகவரிகள் முதலானவற்றைக்…

சிவகங்கை இராமச்சந்தினார் நூல் வெளியீடு – நகைமுகன் படத்திறப்பு : ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்  கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார்  நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]   ஒளிப்படங்கள் : ஞான அசோகன்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 11. கொலை விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 11. கொலை விலக்கல் கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும். வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும். அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும். இயலு மிடத்தச் செயலைத் தடாமை. நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். கொலை…

பெரியபுராணத் தொடர்பொழிவு : முகிலை இராசபாண்டியன்

  வைகாசி 30, 2047 / சூன் 12, 2016 மாலை 5.00 தலைநகரத்தமிழ்ச்சங்கம், வண்டலூர், சென்னை 600 048   தொடர் சொற்பொழிவு  13 : பேரா.முகிலை இராசபாண்டியன்