எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – குவியாடி

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?   விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக்கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை. ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்வதால் சில ஐயங்கள் ஏற்படுகின்றன. வரலாறு…

 வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! –      குவியாடி

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! –      குவியாடி ஒடுக்கப்பட்ட மக்களின் – பாரதியின் மொழியில் சொல்வதானால்  தணிந்த சாதியினரின் – நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில்    ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. அதே நேரம், பொய்க்குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் பிற வகுப்பினரின் நலன்களைக் காக்கவும் சட்டத்தில் திருத்தம் தேவை. இதைக் காலங்கடந்தேனும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால்…

கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்?  கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ‘ கலைமாமணி’. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன. கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு கரைந்து போகும். நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும்பொழுது இதற்கெல்லாம் முதன்மை கொடுக்க வேண்டுமா என எண்ணலாம். ஆனால், நாட்டு வளர்ச்சியில் கலைவளர்ச்சியும் அடக்கம். கலைவளர்ச்சியில்…