வெருளி நோய்கள் 1551-1555 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1546-1550 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1551-1555
- பகிர் வெருளி – amipartophobia
செய்திகளை நண்பர்களிடம் பகிர்வது தொடர்பான பேரச்சம் பகிர் வெருளி.
நண்பர்களிடம் குறிப்பாகத் தோழிகளிடம் தம்மைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது குறித்துப் பெரிதும் கவலைப்படுவர்.
சில செய்திகள் மூலம் தவறாக எடைபோடுவர் என்ற அச்சமும் சில செய்திகள் தொடர்பான தாழ்வு மனப்பான்மையும் வருவது இயற்கை.
ami என்னும் பிரெஞ்சுச்சொல்லிற்கு நண்பர் எனப்பொருள்.
00
- பகு எண் வெருளி – Compustitusnumerophobia
பகு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகு எண் வெருளி.
எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகு எண் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- பசு வெருளி – Vaccaphobia
பசுபற்றிய அளவுகடந்த பேரச்சம் பசு வெருளி.
இந்துக்கள் பசுவைத் தெய்வமாகப் போற்றுவதால், அதில் குறைபாடு எதுவும் நேரக்கூடாது என்ற கவனத்தினால் பசு வெருளி வருகிறது. இந்து மதத்தில் தீவிரவாதப் பிரிவினர் சிலர் பசுவைப் போற்றுவதாகக் கூறி அட்டூழியங்கள் செய்வதால் பாதிக்கப்படும் பிற சமயத்தவருக்கும் பசு வெருளி வருகிறது.
கால்நடை வெருளி(Bovinophobia) என்பதில் பசு வெருளியும் அடக்கம். இருப்பினும் இதைத் தனித்துக் கூறுவதற்காகப் பசு வெருளி(Vaccaphobia என்கின்றனர்.
Vacca என்றால் இத்தாலிய மொழியில் பசு எனப் பொருள். இச்சொல் இத்தீனிலும் இடம் பெற்றுள்ளது.
00
- பசுமை இல்ல வெருளி – G🚆mzophobia
பசுமை இல்லம்(greenhouse) குறித்த வரம்பற்ற பேரச்சம் பசுமை இல்ல வெருளி.
ஒளிபுகும் சுவர்களும் கூரையும் கண்ணாடியால் அமைந்த கட்டிடம் என்பதால் கண்ணாடி இல்லம்(glasshouse) என்றும் சொல்வர்.போதுமான வெப்பம் உள்ள அமைப்புக் கட்டிடம் என்பதால் வெம்மை இல்லம்(hothouse) என்றும் சொல்கின்றனர். பசுமைக்குடில், கண்ணாடிக்குடில், வெங்குடில் என்றும் குறிப்பிடுகின்றனர்.
00
- பசைவெருளி – Kollaphobia
பசை மீதான அளவு கடந்த பேரச்சம் பசை வெருளி.
பசை கையில் ஒட்டிக் கொள்ளுதல்,ஒட்டப்படும் இடத்தில் மிகுதியாகி ஈரமாதல் போன்ற காரணங்களால் வெறுப்புற்றுப் பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply