761. செலுத்தீட்டு விசைமானி transmission dynamometer  
762. செவ்விய விரவு கதிரி

 

perfect diffuse radiator  
763. செவ்வியக் கதிரி

 

perfect radiator  
764. செவியக நோக்கி otoscope / auriscope செவியின் உட்பகுதிகளை ஆராய்வு செய்ய உதவும் கருவி.

உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி. (-செ.)

செவிநோக்கி

காது நோக்கி, செவியாக நோக்கி (எழுத்துப்பிழையோ?),செவி ஆய்வுக் கருவி, செவிகாட்டி, செவியக நோக்கி எனவும் பலவகையாகக் குறிக்கப் பெறுகின்றது. இவற்றுள் செவியாகநோக்கி என்பது அச்சுப்பிழையாக இருக்கும். உட்செவி ஆய்வுக்கருவி , செவிஆய்வுக் கருவி என்பன செவிக்கருவிகளின் பொதுப்பெயராக அமைகின்றன. எனவே, செவியக நோக்கி / செவியறைநோக்கி எனலாம்.

765. செவியொலிமறிப்புமானி

 

Madsen impedance meter

 

அறிவியலாளர் சாமுவேல் அண்டர் கிரசுடீ( Samuel Hunter Christie) அவர்களால் 1833இல் உருவாக்கப்பட்டு,அறிவியலாளர் வயவர் சார்லசுவீட்சுடோன்(Sir Charles Wheatstone) அவர்களால் 1843இல் மேம்படுத்தப்பட்ட மின்மறிப்புக் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருவி.

இயல்பாகவும் கேளாத்தன்மையிலும் உள்ள செவிகளின் ஒலி மறிப்புத்தன்மையை அளவிடும் இக்கருவி, இதனை உருவாக்கிய அறிவியலாளரல் தார்வேல்டு மேடுசென் ( J.M. Thorvald     Mad·sen: 1870-1957 ) பெயரில் மேடுசென் மின்மறிப்புமானி என அழைக்கப்பெறுகிறது. செவியொலிமறிப்புமானி எனலாம்.

766.  செறிவுக்குறிகைச் சுற்றுமானி stroboscopic tachometer  
767. செறிவுமானி araeometer densimeter செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி, நீர்மச் செறிவுமானி.(-செ); செறிவு ஒப்பீட்டளவைக் கருவி,

என விரிவாகக் கூறாமல் செறிவுமானி எனச் சுருக்கமாகக் கூறலாம்.

768. சேர்மான அளவி combination gauge or compound gauge  
769. தகட்டளவி plate gauge/ sheet gauge  
770. தகட்டிழைத் தொடரளவி foil train gauge  
771. தகட்டு மாழை அளவி sheet metal gauge  
772. தகவமைவுமானி adaptometer கண் தகவமைப்புக் காலத்தைக் கணக்கிட உதவும் கருவி. மாலைக்கண்நோய், விழித்திரைநோய் முதலான கண்நோய்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. அகஒளி அளவி, இசைவு மானி, இணக்க ஒளியளவி, உணர்ச்சி தாங்கு அளவி என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். தகவமைவு மானி என்றால் கருவியின் பயனைச் சரியாகக் குறிப்பிடுவதாக அமையும்.
773. தகவளவுக்

கவராயம்

proportional divider வீதஅளவுக் கவராயம் : வரைபடங்கள் வரைவதற்குப் பயன்படும் கவராயம். இதில் இரு முனைகளுடைய கால்கள் ஒரு சுழல்முனையுடனும் திருகுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுழல் முனையையும் திருகையும் கையாண்டு கவராயத்தை வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம். (-ம.504)

தகவளவுக்கவராயம் எனலாம்.

 

774.  தகவுமானி ratio meter  
775.  தகைவு திறன்மானி piezoelectric potentiometer  
776.  தகைவுத் திரிதடைய முடுக்கமானி piezotransistor accelerometer  
777.  தகைவுமின் முடுக்கமானி piezoelectric accelerometer  
778.  தங்கஇழை சவ்வு ஈரமானி gold beater’s-skin hygrometer  
779. தச்சு அளவி carpenters gauge  
780. தசை அதிர்வு வரைவி tremograph தசை அதிர்வு வரைவுக்கருவி.   தசை அதிர்வு வரைவி
781. தசைமின்வரைவி electro myograph தசைஇயக்கத்தைப் பதிவு செய்வது.
782. தசையியக்க வரைவி (மரு.)

உறுப்பியக்க வரைவி(பொறி.)

பணிவரைவி(புவி.)

ergograph தசையியக்கத்தின் அளவைப் பதிய உதவுவது. உழைப்பின் அளவுக் கோட்டுப் படம், உணர்வுற்ற தசையிக்க வரைவி, களைப்புவரைவி,உறுப்பு இயக்கம் பதிவி(பொறி.நுட்பவியல்). உழைப்பின் அளவுவரை (புவியியல்) எனப் பல வகையில் குறிப்பிடுகின்றனர். பொதுவாகச் செயல்பாட்டுப் பணியாகிய இயக்கத்தை அளவிடுவதால், தசையின் இயக்கத்தைக் குறிக்க மருத்துவத்துறையில் தசையியக்க வரைவி என்றும் பொறிகளின்

உறுப்புகள் இயங்குவதை   அளவிடுகையில் உறுப்பியக்க வரைவி என்றும் பணியாற்றும் அளவைக் குறிப்பிடுகையில் புவியியலில் பணிவரைவி என்றும் குறிக்கலாம்.

783. தசையியக்கமானி (மரு.)

உறுப்பியக்க

மானி(பொறி.)

பணிமானி(புவி.)

ergometer உறுப்பு இயக்க அளவி

எனப் பொறியியலில் குறிக்கின்றனர். மேலே (ergograph ) குறித்தவற்றின் அடிப்படையில்

வகைப்படுத்துவதே ஏற்றதாகும்.

784. தட்டல் மானி plegometer / pleximeter வீச்சு அல்லது தட்டுதலின் வலிமையை (strength of a blow) அளவிடும் கருவி.
785. தட்டையாடித் தொலைநோக்கி newtonian telescope முதன்மைக் குழியாடியும் தட்டையானகுறுக்குத் துணைஆடியும் கொண்ட தொலைநோக்கி.
786. தட்ப மானி

 

cryometer /   frigorimeter

 

குறைந்த அழுத்த வெப்ப

நிலைகளை அளக்க உதவும் கருவி (-மூ.160) தாழ்நிலை தட்பவெப்பமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி விரிவாகக் கூறுகிறது. பேராசிரியர் அ.கி.மூர்த்தி தண்மானி எனச்   சுருக்கமாகவே கூறுகிறார். எனினும் பொதுவாகக் குளிர்ச்சி என்று மட்டும் பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது. தாழ்நிலை வெப்பம்தானே தட்பம்! தண் என்னும் சொல்லில் இருந்து பிறந்ததுதான் தட்பம். தட்ப வெப்ப நிலை என நாம் (கிளைமேட்/climate-ஐக்) கூறுவதால், தட்பத்தை அளக்க உதவுவதைத் தட்பமானி என்பது சரியாக இருக்கும்.

787. தடங்காண் தொலைநோக்கி tracking telescope  
788. தடம் நோக்கி hodoscope (see conoscope)  
789. தடவழி அலகீட்டுக் கதிரியமானி (த.அ.க.மானி) along- track scanning radiometer (atsr)  
790. தடிப்பளவி bark gauge  
791. தடிமமானி pachymeter  
792. தடை திரிபளவி resistance strain gauge தடைவிகாரமானி (-ஐ.) என்பதைவிட தடை திரிபளவி   எனலாம்.
793. தடை திறன்மானி resistivitymeter  
794. தடை வளியழுத்தமானி resistance manometer  
795. தடை வெப்பமானி resistance thermometer  
796. தடைப்

பொழுது சுழல் நோக்கி

control moment gyroscope பயணத்தடக் கட்டுப்பாட்டுக் கொட்புநோக்கி என விரிவாகக் கூறாமல் – ஒழுங்கின்மையைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதால், – தடைப்பொழுது சுழல் நோக்கி எனச் சுருக்கமாகக் கூறலாம்.
797.  தடைமிமானி ohmmeter மின்தடையை அளக்க உதவுவது. மின்தடை அலகு தடைமி (ohm) எனப்பெறும்.எனவே, தடைமிமானி எனலாம்.
798.  தடையிடு பாய்மமானி resistive flow meter  
799. தண்மானி  frigorimeter தாழ்ந்த வெப்பநிலையை அளவிடும் வெப்பமானி வகைக் கருவி. தண்மானி எனலாம்.
800. தர அளவி standard gauge