721. சுருள்மின்னியக்க விசைமானி Siemens’ electrodynamometer மின்தொடரில் உள்ள அனைத்துச் சுருள்கள் வாயிலாகவும் மின்னோட்டம் பாய்வதை அளவிடும்   மின்காந்தக் கருவி வகை.
722. சுருள்வரைவி helicograph சுருள்களை வரைவதற்குரிய கருவி.
723.  சுருள்வலயத் திறன்மானி helical potentiometer  
724.  சுழல் உணக்க மானி whirling psychrometer  
725.  சுழல் கற்றை முகில்மட்டமானி rotating-beam ceilometer  
726. சுழல் நோக்கி gyroscope

 

 

சுழல் வேகமானியால் சம நிலைப்படுத்தப்பட்டு எந்தத் திசையிலும் திருப்பு வளையங்களின் உட்புறம் அமைந்த சமனுருள். (-ம.326)

சுழல்பொருள்களின் இயக்கத்தை நோக்க உதவும் கருவி.

கொட்பளவி,

கொட்புநோக்கி,

கொட்புமானி,

சுழல் கருவி,

சுழலாழிக் கருவி

சுழல் காட்டி

சுழல் வேகமானி

சுழலாழி

சுழிகாட்டி

சுழிப்புக்காட்டி

சுழலியக்கம்   காட்டி

திருகுசுழலாளி

என அரசுத்துறைகளில் வெவ்வேறு வகையாகக் குறிக்கின்றனர். சுழற்சியைக்குறிக்கும் கொட்பு என்னும் சொல்லடிப்படையில் கொட்பி என்பது சரிதான். ஆனால், இச்சொல் வேறிடத்தில் (whirl)பயன்படுவதாலும், நடை முறையில் சுழல் தொடர்பான சொல் இருக்கையில் வேறு சொல்லைத் தேட வேண்டிய தேவை இன்மையாலும் சுழல் நோக்கி என எளிமையாகக் கூறலாம்.

727.  சுழல் பொருட்பெயர்வு மானி rotary abutment meter  
728. சுழல் மடல்மானி rotary-vane meter  
729. சுழல் மின்னழுத்த மானி rotary voltmeter  
730. சுழல்நோக்கித் திசைகாட்டி

 

gyroscopic compass/ Martenssen gyroscopic compass  
731.  சுழல்வுமானி rotameter பாய்வுவீத மானி (-செ.), சுழலும் பாய்ம வேகமானி (-செ.).

மூடிய குழாயில் நீர்ம அல்லது வளிம ஓட்டத்தை அளவிட உவுவது.

சுருக்கமாகச் சுழல்வுமானி எனலாம்.

732. சுழலகற்சித் திரள் பாய்மமானி Coriolis-type mass flowmeter  
733. சுழலமைவு பாகுமைமானி rotational viscometer  
734. சுழலுருளைப் பாகுமைமானி rotating cylinder viscometer  
735. சுழலோட்டத் திசைகாட்டி gyre compass /

gyro compass

 
736. சுழற்சிநோக்கி stroboscope இயங்குபொருள் நிகழ்வெண் காணி (-இ). செயலளவில் சரிதான். என்றாலும், தொடராக உள்ளது.

சுழல் வேகம் காட்டி(-இ) சுழல் வேகத்தைக் காட்டுவது நோக்கமில்லை. சுழல் வேகத்தில் நோக்க உதவுவது.

சுழற்சிநோக்கி :ஒரு சுழலும் எந்திரத்தின் வேகத்தை அளவிடுவதற்கான அல்லது அதன் இயக்கத்தை ஆராய்வதற்கான ஒரு கருவி. இதில் மாறுகிற வேகமுடைய பொறிவிளக்கு இருக்கும். இதனைச் சுழலும் எந்திரத்திற்கேற்ப ஒருங்கியைபு செய்து கொள்ளலாம். இவ்வாறு ஒருங்கியைபு செய்த வேகத்தில் சுழலும் உறுப்புகள் நிலையாக இருப்பதுபோல் தோன்றும்(மின்னியல்). (-ம.595)

சுழல்பொருள் நோக்கி :சீரான இயக்கத்துடன் விரைவாகச் சென்று கொண்டிருக்கும் பொருள்களை, அவை நிலையாக இருப்பதுபோல் பார்க்கும் கருவி (இயந்திரவியல்). (-மூ.676). செயற்பாட்டுஅடிப்படையில் இரண்டும் சரிதான். சுழற்சி நோக்கி என்றால் சுழற்சியை நோக்குவது என்று எடுத்துக் கொள்ளாமல் சுழற்சியில் உள்ள பொருள் நோக்கி என விரி பொருளாகக் கொள்ளலாம்.

[சுழல் நோக்கி (gyroscope ) என மற்றொரு கருவி உள்ளதால் அவ்வாறு குறிப்பிட இயலாது.]

 

737. சுழற்சிப் பாகுமைமானி couette viscometer/ rotational viscometer/ rotation viscometer  
738. சுழற்சிமானி tropometer விழிச்சுழற்சி போன்ற சுழற்சியை அளவிடும் கருவி.

முறுக்கஅளவி, விழிச்சுழல்மானி, விழிச்சுழற்சிமானி, எலும்பு முறுக்கமானி எனப் பலவகையாகக் கூறுப்படுவனவற்றுள் சுழற்சிமானி என்பதே சுருக்கமான பொருத்த சொல்லாகும். எலும்பு முறுக்கத்தை அளவிடுகையில் முறுக்கமானி என்பது சரியாக அமைந்தாலும் பொதுவான சொல்லாகச் சுழற்சிமானியைக் கையாளலாம்.

739. சுழற்சிவரைவி gyrograph சுழற்சிகளைப் பதிவுசெய்யும் கருவி.
740. சுழிப்பு இறக்கமானி vortex-shedding meter  
741. சுழிப்பு முந்துகை பாய்மமானி vortex precession flow meter  
742. சுழிப்பு வெப்பமானி vortex thermometer  
743. சுழிப்புப் பாய்மமானி vortex cage meter  
744. சுழிவு உலவை மானி  rotation anemometer  
745. சுழிவு மின்கடவு சுற்றுமானி eddy-current tachometer  
746. சுற்று வரைவி

 

 

tachograph இரத்த ஓட்ட வேக வரைவி   (-த.),

சுழல்வரைவி(-செ.), சுழற்சிப்பதிவு ( -ஐ.),எனக்கூறப்படுகின்றது. இரத்தச் சுற்று விரைவைக் கணக்கிடுவதால், சுருக்கமாகச் சுற்று வரைவி எனலாம். ஊர்தியின் விரைவையும் ஓட்ட நேரத்தையும் ஊர்திச்சக்கரச் சுற்று மூலம் அறியும் இயந்திரக் கருவியும் உள்ளது. அதற்கும் சுற்று வரைவி என்பது பொருந்தும்.

747. சுற்றுமானி tachometer ஊர்திச் செலவுச் தொலைமானி, சுற்றுமானி, சுழல் அளவி, சுழல் வேக அளவி, சுழற்சிமானி, சுழற்சிவீதமானி,

தூர அளவி, விசைமானி, விரைவுமானி, வேகமானி எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர். ஊர்திச் சக்கரம் சுற்றுவதை

அளவிடும் கருவி என்பதால்

சுற்றுமானி   என்பதே சரியாக உள்ளது.

748. சூட்டுக்கம்பி உலவை மானி hot-wire anemometer  
749. சூட்டுக்கம்பி மின்னோடிமானி hot-wire ammeter  
750. சூரிய அலைமாலை நோக்கி spectrohelioscope  
751. சூரியத் தொலைநோக்கி solar telescope  
752. சூரியப் பட வரைவி photoheliograph

 

கதிரவனைப் படம் பிடித்துத்தரும் ஒளிப்படக்கருவி யமைப்பு
753. சூழிட நோக்கி periscope  
754. செங்குத்து உலவை மானி vertical anemometer  
755. செங்குத்துத் துளைவுத்திரிகை vertical boring mill செங்குத்துத் துளைக் கருவி:

கடைசல் எந்திரத்தில் ஒரு சுழல் மேசையில் இழைப்புளியைச் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும்நகர்த்திக் கடைசல் வேலை செய்வதற்கான கருவி.( ம.660)

செங்குத்துத் துளைவுத்திரிகை எனலாம்.

756. செங்குத்துமானி vertimeter செங்குத்துமானி : வான் கூண்டின் ஏற்ற இறக்க வீதத்தைக் காட்டும் சாதனம். இது ஒரு தனி வகை நீரில்லா நுண்ணழுத்த மானியாகும். ஏற்ற வீதமானி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது.( ம.660)
757.  செய்கோள் அகச்சிவப்பு நிறமாலைமானி satellite infrared spectrometer  
758.  செருகல்மானி insertion meter உந்திசிறு முற்செலுத்தி (propeller) அல்லது விசைச்சுழலியின்(turbine) சுழற்சிவீதத்தை அளவிடும் பாய்மமானி வகைக் கருவி. சுழல்வீதமானி என்று சொல்லலாம். ஆனால், செருகப்படும் நிலையில் இருப்பதால் செருகல்மானி எனப்படுகிறது.
759. செருகுஅளவி plug gauge செருகுஅளவி :   எந்திர வேலைப்பொருள்களின் உள் விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. (-ம.491)

செருகிமானி,

சொருகி மானி,

சொருகும் மானி,

முளைக் கடிகை,

என்பன ஏற்றனவாக இல்லை.

760. செல்வழித் தொலைநோக்கி transit telescope கடப்புத் தொலைநோக்கி(-இ.) எனச் சொல்வதைவிடச் செல்வழித் தொலைநோக்கி என்றால் ஏற்றதாக அமையும்.