homosex02

கலைச்சொல் 113. தற்பாலுறவு வெருளி-Homophobia

   தன் (319), தன்முன் (1), தனக்கு(14), ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. பால் என்னும் சொல் 152 இடங்களில் பயன்படுத்தப் பெற்றிருந்தாலும், பசும்பால், கள்ளிப்பால் போன்ற பால் நீர்மங்களையும், பகுத்தல் என்னும் பொருளிலும்தான் கையாளப்பட்டுள்ளன.

  பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும் நடைமுறை சங்கக் காலத்திலும் இருந்துள்ளது. உறவு என்னும் சொல் ஓரிடத்தில் கையாளப்பட்டுள்ளது.

  தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின் (புறநானூறு : 395: 4)

எனவே, ஒரு பாலினர் தன்னுடைய பாலினருடன் உறவு கொள்வதைத் தற்பாலுறவு என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் தற்பாலுறவு குறித்த பேரச்சம் தற்பாலுறவு வெகுளி எனப்படலாம். (தன்+பால்+ உறவு+ வெருளி)

தற்பாலுறவு வெருளி-Homophobia

– இலக்குவனார் திருவள்ளுவன்