department_of_sciences04

  1. மரபு இயைபியல் – genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை:
  2. மரபு வழியியல் – geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை:
  3. புவி வேதியியல் – geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை
  4. புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை
  5. புவியியல் – geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும் துறை
  6. புவி வளரியல் – geology : புவி வரலாறு, வளர்ச்சி,   திணை உயிர்கள் ஆகியவற்றை ஆராயும் துறை
  7. புவி இயற்பியல் – geo physics: புவியையும் அதன் காற்று வெளியையும் இயற்பியல் முறைகளில் ஆராயும் துறை
  8. மூப்பியல் – gerontology: உயிரியல் தொகுதிகளில் மூப்பு முறைகளை ஆராயும் துறை
  9. மகளிர் நோயியல் – gynaecology: பெண்கள் நோய்கள் பற்றி ஆராயும் துறை
  10. குருதியியல் – haematology: குருதி அமைப்பு,   தோற்றம்,   வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயும் துறை

– இலக்குவனார் திருவள்ளுவன்