குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி) சூழலால் உருவாவதே அறிவு! மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ – 454) ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும். பதவுரை : மனத்துளது போலக் காட்டி – (ஒருவனின்) மனத்தில் உள்ளதாகத் தோற்றத்தைக் காட்டி; ஒருவற்கு – ஒருவனுக்கு;இனத்துளதாகும் – அவன் சேர்ந்துள்ள இனத்தின் தன்மையாகவே;அறிவு –…
வெருளி நோய்கள் 1121-1125: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1116-1120 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1121-1125 1121. செயற்கை நுண்ணறிவு வெருளி – Arachtophobia செயற்கை நுண்ணறிவு குறித்த வரம்பற்ற பேரச்சம் செயற்கை நுண்ணறிவு வெருளி.கணிணி முதலான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு மனித ஆற்றலையும் விஞ்சுவதால் தீங்கு நேரும் என்ற பேரச்சம் கொள்கின்றனர்.செயற்கை உயிரி வெருளி(Logicomechanibiophobia) உள்ள வர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு வெருளி(Arachtophobia) வரும் வாய்ப்பு உள்ளது.00 செய்தித்தாள் குறித்த வரம்பற்ற பேரச்சம் செய்தித்தாள் வெருளி.திடீர் இறப்புகள், பயங்கரமான நேர்ச்சி( விபத்து)கள், துயர நிகழ்வுகள் , போர்ச்செய்திகள் முதலானவற்றைப் படிக்க நேர்வதால்…
வெருளி நோய்கள் 1116-1120: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1111-1115: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1116-1120 செந்நிற முடி உடையவர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் செம்முடியர் வெருளி. செந்நிற முடி என்னும் பொருள் கொண்ட rufus சொல்லில் இருந்து Rufo உருவானது.00 செயல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செயல் வெருளி.Praxi என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செயல் என்று பொருள்.00 செம்மறியாட்டினைக்கண்டால் அல்லது செம்மறியாடு தொடர்பாக ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மறியாட்டு வெருளி.Ovina என்னும் இசுபானியச் சொல்லிற்குச் செம்மறியாடு என்று பொருள். பின்னர் இலத்தீனிலும் இதே பொருளில் கையாளப்பட்டு வருகிறது.00…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது இக்கோப்பில் பெரியக் குளம் என்று உள்ளது. முன்பே பெரிய, சிறிய ,நல்ல. கெட்ட, சிறியன, அல்லன, பெரியன, நல்லன. என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது எனக் கூறியிருந்தேன். அதுபோல் மேலும் சிலவற்றைப் பார்ப்போம். பெரிய குளம்; பெரிய குடும்பம்; பெரிய செய்கை; பெரிய திட்டம்; பெரிய துறை; பெரிய தெரு; பெரிய தொல்லை; பெரிய பாசனம்;…
வெருளி நோய்கள் 1111-1115: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1111-1115 செந்நெல்லி(Cranberry)குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நெல்லி வெருளி.1959 ஆம் ஆண்டு , செந்நெல்லி அறுவடையில் அமினோட்ரியசோல்(aminotriazole) என்ற களைக்கொல்லி கலந்திருப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவித்தன, இதனால் இவ்வுணவு மீது அச்சம் ஏற்பட்டது. இதனால் வந்நதே செந்நெல்லி வெருளி( Kurberiphobia) 00 செம்மஞ்சள் நிற முடியுடையவர்களைக்கண்டால் ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மஞ்சள் முடியர் வெருளி.Ginger என்பதற்கு இஞ்சி முதலான பொருள்களுடன் மங்கிய செம்மஞ்சள் நிறம் என்றும் பொருள் உண்டு. இங்கே செம்மஞ்சள்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06 “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும்…
வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1101-1105: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1106-1110 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5
3 ] தமிழ்நாடு , க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்
(க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடுக. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்’ எனக் கருதி வாழ்நதனர்.சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை…
வெருளி நோய்கள் 1101-1105: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1096-1100 தொடர்ச்சி). வெருளி நோய்கள் 1101-1105 பில்லி சூனியம் பற்றிய பேரச்சம் சூன்று வெருளிநிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை (அகநானூறு : 381.6)நிழலினை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள என்பது பொருள். சூன்று என்பது அகழ்ந்துஎடுப்பதை தோண்டுவதைக்குறிக்கின்றது. நாலடியாரில்(44) நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை என்னும்பொழுது தெளிவாகப் பொருள் புரிகிறது. மண்ணைத் தோண்டி அதில் தகரம் அல்லது ஏதாவது ஒன்றைப் புதைத்துத் தீவினை ஆற்றுவதால் சூனியம் எனப் பெயர் வந்துள்ளது.00 செங்கல் குறித்த வரம்பற்ற பேரச்சம் செங்கல்…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் 1
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு இன்றைய நூலாய்விற்குரிய 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் என்னும் நூலின் ஆசிரியர் இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு, எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆய்வாளர்,பெண்ணிய வரலாற்றாளர், குமுகச்செய்றபாட்டாளர் ஆவார்.எனவே, இவரது நூல்கள் பலவும் அறியப்படாமல் உள்ள அறிய வேண்டிய செய்திகளை அறியச்செய்யும் வகையில் உள்ளன. முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, வடசென்னை – வரலாறும் வாழ்வியலும், அறியப்படாத கிறித்தவம் (இரண்டு பகுதிகள்), பெயரற்றவர்களின் குரல் முதலிய நூல்கள் இவரது ஆய்வுப்…
வெருளி நோய்கள் 1096-1100: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1091-1095 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1096-1100 பில்லி சூனியம் பற்றிய பேரச்சம் சூன்று வெருளிநிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை (அகநானூறு : 381.6)நிழலினை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள என்பது பொருள். சூன்று என்பது அகழ்ந்துஎடுப்பதை தோண்டுவதைக்குறிக்கின்றது. நாலடியாரில்(44) நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை என்னும்பொழுது தெளிவாகப் பொருள் புரிகிறது. மண்ணைத் தோண்டி அதில் தகரம் அல்லது ஏதாவது ஒன்றைப் புதைத்துத் தீவினை ஆற்றுவதால் சூனியம் எனப் பெயர் வந்துள்ளது.00 செங்கல் குறித்த வரம்பற்ற பேரச்சம் செங்கல்…
வெருளி நோய்கள் 1091-1095: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1086-1090 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1091-1095 சூடேற்றி(heater) குறித்த வரம்பற்ற பேரச்சம் சூடேற்றி வெருளி.சூடேற்றி குறித்து வெப்ப நாடுகளில் ஒரு வகையாகவும் குளிர் நாடுகளில் ஒரு வகையாகவும் காரணமற்ற பேரச்சம் உள்ளது. எனினும் அடிப்படையில் பயன்பாடு சார்ந்தே இப்பேரச்சம் உருவாகிறது.00 சூட்டடுப்பு (Oven) வெருளி குறித்த வரம்பற்ற பேரச்சம் சூட்டடுப்பு வெருளி.சிலர் காரணமின்றியே சூட்டடுப்பைப் பயன்படுத்த பேரச்சம் உள்ளதாகக் கூறுகின்றனர். சமையல் வெருளி உள்ளவர்களுக்கும் சூட்டடுப்பு வெருளி வர வாய்ப்புள்ளது.Fourno என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சூட்டடுப்பு எனப் பொருள். Cliban என்னும்…
