இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 1 அன்புள்ள அவையோருக்கு வணக்கம். “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன் தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும்…
வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1151-1155 சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)00 சேறு குறித்த பேரச்சம்…
வெருளி நோய்கள் 1146-1150: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1141-1145: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1146-1150 சேகா நிறுவனத்தின் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேகா காணாட்ட வெருளி. சேகா என்பது சப்பானின் தோக்கியாவில் உள்ள சினகாவா(Shinagawa) நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் காணாட்ட நிறுவனமாகும்.Service Games என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கமே சேகா (Se Ga)என்பது.00 சேடன் மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேடன் வெருளி.உட்கார் என்னும் பொருள் காெண்ட “sedere” என்னும் இலத்தீன் சொல்லில் இருற்து உருவானதே “sedan”. அமர்ந்து செல்வதற்கு வசதியானது என்பதை உணர்த்தும் வகையில் இம்மகிழ்வுந்து…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி) இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு எழுதிய ‘1938 முதல் மொழிப்போரில் பெண்கள்’ நூலாய்வு 2 இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம். வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை, அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும்…
வெருளி நோய்கள் 1141-1145: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1136-1140: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1141-1145 செவ்வாய்க் கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வாய்க் கோள் வெருளி.கணியம் அல்லது சோதிடம் என்பது உண்மையானால் செவ்வாய்க்குரிய நற்பலன்கள் மீதும் நம்பிக்கை வரவேண்டும்.ஆனால் பணத்தைக் கறப்பதற்காகச் “செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய்த் திசை வந்தால் துன்பங்களும், இன்னல்களும் நேர்ச்சிகளும்(விபத்துகளும்) வந்து சேரும்” என்றும், “செவ்வாய்க் கோளானது அது அமர்ந்த வீட்டுக்கும் அது தொடர்பு பெற்றிருக்கும் இடங்களுக்கும் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்” என்றும் சொல்கின்றனர். இதற்குக் கழுவாயாக/பரிகாரமாக ஏதேனும் செய்வதாகச் சொல்லிப் பணம்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07 தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 ) செந்தமிழ் நிலத்து…
உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – திருத்துறைக் கிழார்
(க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் – தொடர்ச்சி) தமிழ்நாடு உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை, அமைச்சரவை பெயரளவில்தாம். தமிழ்நாட்டிற்குகந்த சட்டங்கள் தொகுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லையே! இந்திய தரப்பு, பாரத நடுவணரசுக்கு அனுப்பி தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தலாம்.தமிழக அரசு இந்திய அரசின் போக்குக்கு மாறாகச் செயல்பட்டால், உடனே கலைக்கப்படும். இப்படித்தான் நான்கு முறை தமிழ்நாட்டரசு கலைக்கப்பட்டது.தமிழக அரசு தில்லி அரசின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க நடுவணரசு ஓர் ஆளுநரை அமர்த்தியுளதறிக.தமிழ்நாட்டில்…
வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1136-1140 பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.00 செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம்…
நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: தொடர்ச்சி) என்ன செய்தாலும் நிலையான வாழ்க்கை கிட்டாது. ஆதலின் நிலையான பயன் தரும் அறம் செய்க! மான அருங்கலம் நீக்கி இரவென்னும்ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்புநீட்டித்து நிற்கும் எனின். நாலடியார் 40 கருத்து: ஈனச்செயலான பிச்சையை மேற்கொண்டேனும் உயிர் வாழலாம் என்னும் நிலை இருந்தால் நிலையான வாழ்விற்காக அதனை மேற்கொள்ளலாம். (ஆனால், உடம்பு நிலையானதில்லை. ஆதலின் நிலையான அறச்செயல் செய்வோமாக!) பதவுரை: மான அருங் கலம்=மானம் என்னும்…
வெருளி நோய்கள் 1131-1135: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1131-1135 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5
தொல்காப்பியம் அறிமுகம், தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி
தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 4 நாள் : மாசி 02, 2057 / சனி / 14.02.2026 / காலை 10.00கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை : புலவர் காளியப்பன் பிற அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் வா. ஆனந்தி , செயலர்முனைவர் புத்தேரி தானப்பன், தலைவர்
வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1121-1125 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1126-1130 செருபியர்கள் மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் செருபிய வெருளி.செருபிய மொழி, நாடு, இனம், கலை, பண்பாடு முதலானவற்றின் மீது மிகுந்த வெறுப்பும் எதிர்மறைப்போக்கும் பேரச்சமும் இத்தகையோர் கொண்டிருப்பர்.செருபிய எதிர்ப்புணர்வை உருவாக்கும் வண்ணம் சில திரைப்படங்களும் வந்துள்ளன.00 செருப்படி விழும் என அளவு கடந்து பேரச்சம் கொள்வது செருப்படி வெருளி.வாய்ச் சண்டைகளில் செருப்பால் அடிபடுவது குறித்த பேரச்சம் இருப்பதுபோல் அரசியல் தலைவர்களுக்குப் பொது மக்களிடம் இருந்து விழும் செருப்படி குறித்த பேரச்சம் உள்ளது.பெரியார் ஈ.வே.இராமசாமி…
