புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55
(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பாலை 51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார் படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய் வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால் அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே. 52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின் திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர் விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே. தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக் கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன் ஆட்டிநீ ‘பிரிக்கலை’ யென் றவ் வன்னையை…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1172 – 1189 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1156 -1171 இன் தொடர்ச்சி) 1172. பயிரியல் Phytology 1173. பயிர் இயங்கியல் Crop Physiology 1174. பயிர் உளவியல் Psychobiology 1175. பயிர் நோய்மி யியல் Phytovirology / Plant virology 1176. பயிர் நோயியல் Epiphytology/ Plant Pathology 1177. பயிர் மருந்தியல் Phytopharmacology 1178. பயிர் வடிவியல் Phytomorphology 1179. பயிர்க் கொப்புளஇயல் Cecidiology,Cecidology 1180. பயிர்த் தோற்றவியல் Phytophenology 1181. பயிர் நூற்புழுஇயல் Phytonematology 1182. பயிர்ப் பூச்சியியல் Pestology 1183. பரத்தமைத்…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1241-1250)-இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1231-1240) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 125. நெஞ்சொடு கிளத்தல் (பிரிவாற்றாமையால் நெஞ்சிடம் புலம்பல்) 161. பிரிவு நோய்க்கு மருந்து சொல், நெஞ்சே! (1241) 162. அன்பில்லாதவரிடம் அன்பைக் காட்டுகிறாயே அறிவிலி நெஞ்சே! (1242) 163. வருந்தும் நோயைத் தந்தவருக்காக வருந்திப் பயனென்ன? (1243) 164. நெஞ்சே! அவரைக் காணச் செல்லும்போது கண்களையும் அழைத்துச் செல்! (1244) 165. வெறுத்தார் என்று வெறுக்க இயலுமோ (1245) 166. பொய்க்கோபம் கொள்ளும் நெஞ்சே! உனக்கேன் ஊடல்? (1246)…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 63
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 62. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 25 ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் செய்து தடுமாறித் துன்புறுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன். பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல்ல செய்தி…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1156 -1171 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1142-1155 இன் தொடர்ச்சி) 1156. பயன்நெறி மெய்யியல் Philosophy – மெய்யியல். Utilitarian – பயன்நோக்கிய, நலப்பயன்சார், நுகர்பயன்சார், பயண முதற் கொள்கையினர், பயனெறி முறைக் கோட் பாட்டாளர், பயன் முதற் கொள்கையர், பயன்நெறி முறையர், பயன்பாட்டு நோக்கு சார் எனப்படுகின்றது. இங்கே உயர்திணையில் குறிக்கப் பெறவில்லை. எனவே, அஃறிணையில் பயன்நெறி மெய்யியல் Utilitarian Philosophy எனலாம். Utilitarian Philosophy 1157. பயன்படு கணக்கியல் Applicable mathematics 1158. பயன்மை Applied – பயன்பாட்டு, பயன்படு, நடைமுறை,…
இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . . . . . . . எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம். “சுகர் பேசண்ட்சு” “முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு” “முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”, “முளைத்த மேத்தி…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1142-1155 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1121 – 1141 இன் தொடர்ச்சி) 1142. பண்டைய மீனியல் Paleoichthylogy 1143. பண்டைய வானிலையியல் Paleometeorology 1144. பண்டைய விலங்கியல் Palaeozoology/Paleozoology 1145. பண்டைய நோயியல் Paleopathology 1146. பண்பாட்டியல் Culturology 1147. பண்பாட்டு இயங்கியல் Cultural Dynamics 1148. பண்பாட்டு மானிடவியல் Cultural anthropology 1149. பண்பாட்டுக் குமுகவியல் Sociology of culture 1150. பண்பாட்டு வளைசலியல் Cultural ecology 1151. பண்பார் உயிரியல் Ctetology 1152. பதனம் காண்க: Process Dynamics…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 36
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 35 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி “விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை” என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். “காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீசு இலாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு இலாரியில் ஏறிவிட்டான்” என்று முருகானந்தம் கூறியதும் “அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?” என்று…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1121 – 1141 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1107-1120 இன் தொடர்ச்சி) 1121. பண்டைய தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Paleoclimatology 1122. பண்டைய மரவியல் Paleodendrology 1123. பண்டைய இனவியல் Paleethnology / Paleoethnology 1124. பண்டைய உயிரியல் Palaeontology 1125. பண்டைய உயிர்ப் படிமவியல் Phytopaleontology 1126. பண்டைய நீர் வள இயல் Paleolimnology தொல் ஏரியியல், தொல் நீர்நிலையியல் என இருவகையாகக் குறிக்கப் படுகின்றது. ஏரி என்று குறிப்பதைவிடப் பொதுவாக நீர்நிலை என்பது பொருத்தமாக இருக்கும். Pale என்பதைத் தொல் என்பதை விடப் பண்டைய…
மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா
பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022மாலை 6.00முத்தமிழ்ச்சங்கம், புதுவைமும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாபுதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 62
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 61. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி “அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது” என்றார் பக்கத்தில் இருந்தவர். “ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?” என்று சிகரெட்டு பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள். நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி,…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 61
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 60. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், “அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை” என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே. பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல்…
