ஒளவையார்:1: ந. சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள் – 10 2. ஒளவையார்   ‘-ஒண்டமிழே!பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1] எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது! ———–[1]. தமிழ்விடுதூது———- உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய…

ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!

ஆய்வுக்கு ஓய்வு!  இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!   உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கைத் தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்! என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக்…

தமிழியக்கம் ஓய்ந்ததே! – மறைமலை இலக்குவனார்

தமிழியக்கம் ஓய்ந்ததே!   இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யாம் வாழும் நாளே! நில்லா உலகில் நிலைத்த புலமையும் எல்லாத் துறையிலும் நிறைந்த அறிவும் பல்லாயிரம் நூல் படைத்த திறமும் ஓருருவாக ஒளிமிளிர்ந்தனரே! கூர்த்த நுட்பமும் சீர்த்த மதியும் ஆர்த்த சொல்வன்மையும் வாய்த்த இவரை அனைத்துத் தமிழரும் உச்சிமேற் போற்றினர்; காழ்த்த சிந்தை கடனெனக் கொண்டு பாழ்த்த கூற்றுவன் உயிர்பறித்தனனே! மாணவர் தமக்கெலாம் மாசறு விளக்காய் புலவர்க்கெல்லாம் பொலிவுறு தலைவராய் இலக்கிய ஆர்வலர்  கலக்கம் போக்கித் துலங்கிடும் கலங்கரை விளக்கமாகவே வாழ்நாளெல்லாம் வயங்கிய மாமணி;…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 17

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 16. தொடர்ச்சி) அகல் விளக்கு பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, ‘சந்திரன்!’ என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். “எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும். இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில்(எசு.எசு.எல்.சி.யில்) மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்”…

ஔவையார் – 1 : இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : 10 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9. தொடர்ச்சி) 3. ஔவையார் இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத் தமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயநாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண் பெண் இளையர் முதியர் என எல்லாரானும் வழங்கப்படுவதொன்று. ஒரோ ரினிய முதுமொழியை எடுத்தோதி, அதனை ‘ஔவை வாக்கு’ என்றும் ‘ஔவைவாக்குத் தெய்வவாக்கு’ என்றும், ‘ஆயிரம் பிள்ளை பெற்ற ஔவையார்’ என்றும் பலவாறாக வழங்குதல் இன்றைக்குங் காணலாம். ஈண்டு ஆயிரம் பிள்ளை யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களையே குறிப்பதாகும்….

குவிகம் இணையவழி அளவளாவல் 25/07/2021

ஆடி 09, 2052 / 25.07.2021 ஞாயிறு மாலை 06.30 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம் .        குவிகம் இணையவழி அளவளாவல்  நீங்களும் பேச்சாளராகலாம் –  முனைவர் சி.சுந்தரராமன்

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று – 2 ஒப்பு நோக்குப் பகுதி – இலக்கியச் சான்று: யாயும் ஞாயும் யார்ஆ கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.                                              -செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை, 40. பொருள் உரை: என் தாயும் நின் தாயும் ஒருவருக்கு ஒருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? எத்தகைய உறவின் முறையினரும் அல்லர். என் தந்தையும் நின் தந்தையும் எந்த…