காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4 செப்பிய…

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்

  தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்  நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம்,  ஆனாரூனா அவர்களைப்பற்றி  செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’  எனத்தொடங்கும்  பாடலைத்,   தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!   தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…

முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்!   புதுச்சேரியின்  செயலாட்சியராக – துணை நிலை ஆளுநராகப்- பொறுப்பேற்றுள்ள முனைவர் கிரண்(பேடி)க்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு நிலைகளில் தன் கனவுகளை நனவாக்கி வருபவர், புதுச்சேரியிலும் தன் கனவுகளை நனவாக்கி மக்கள் பணியாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.   பொதுவாக ஆளுநர் என்பது பொம்மை அதிகாரமுடைய பதவி என்பர். மத்திய அரசின் சார்பாகச் செயல்பட்டாலும், மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே இணக்கமான போக்கு இருக்கும்பொழுது மாநில அரசிற்கு மாறான போககு இருப்பின்…

தற்காலத் தமிழ்ச் சூழலியல் தொடர்பியல் – கருத்தரங்கம், சென்னை

  ஆடி 14, 2047 / சூலை 29, 2016 இதழியல் – தொடர்பியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம்  அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்   கட்டுரைகள் வந்து சேர இறுதி நாள் : ஆனி 01, 2047 / சூன் 15, 2016  

நா.அருணாசலம் நினைவேந்தல், திருவண்ணாமலை

  ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி   வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன்  முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

மொழிமானக் காவலர் தமிழமல்லன் – மு.பாலசுப்பிரமணியன்

  மொழிமானக் காவலர் தமிழமல்லன் தமிழுணர்வு குன்றாத தகையாளர் தன்மானம் நின்றோங்கும் நெறியாளர் உமியாக அயற்சொற்கள் கலப்பதையே உரக்க எதிர்க்கின்ற வீராளர் மல்லனுடை பாக்கள் என்றால் அனல்பறக்கும் நல்லொழுக்கம் கருத்துவளம் அணிவகுக்கும் கன்னலென தேன்பாக்கள் கரும்பினிக்கும் நன்னெறியில் பிறழ்வோரை சுட்டெரிக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் வீச்சிருக்கும் தென்னிலங்கை மண்பெருமை மூச்சிருக்கும் மண்மானம் மொழிமானம் காத்திருக்கும் எதுகையும் மோனையும் எழுந்துநிற்கும் எழுதென்று உவமையெலாம் ஏங்கிநிற்கும் தொடைவந்து தோள்சாய்ந்து காத்திருக்கும் தோதான இடம்கேட்டு பார்த்திருக்கும் படையெடுத்துச் சொல்லெலாம் படியிருக்கும் மடைதிறந்த வெள்ளம்போல் கவிசிறக்கும் பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர் பாடாற்றி…

மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு 2/2 தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து : நூல்களின் பங்கு 2/2   சிறந்த அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மாமேதை சாக்ரடீசுக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இளைஞர்களைச் சிந்திக்க வைத்த அந்த மேதை நஞ்சு அருந்தி இறக்க வேண்டும் என்பது தண்டனை. சாக்ரடீசு அதற்காகக் கவலைப்படவில்லை. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவந்தது. சிறையில் இருந்த சாக்ரடீசு அந்நாட்டின் ஒரு கவிஞர் எழுதிய கவிதைகளைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் வியந்து அவரிடம் படிப்பதற்கான காரணத்தைக்…

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி. – வாலாசா வல்லவன்

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி.     1955 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தி மொழியை எப்படி எல்லாம் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய பி.சி.கெர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு இந்தியா முழுவதும் முழுவதும் சென்று கருத்துகளைக் கேட்டறிந்தது.   மார்கழி 27, 1986 / 1956 சனவரி 11ஆம் நாள் அக்குழு முன்பு ம.பொ.சி.  கருத்துரைத்தார் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசு கழகம் ஏற்றுக் கொள்ளுகிறது. மத்திய அரசின் நிருவாக மொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், உச்ச…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 தொடர்ச்சி)   பெண்ணுக்கு ஒரு சிறு குறையிருந்தாலும் அதைப் பெரிதாக்கி அவளை மூலையில் முடங்க வைத்துவிடுவதும், ஆணுக்கு உடலளவிலும், மனத்தளவிலும் எவ்வளவு பெரிய குறை இருந்தாலும் அதை மூடி மறைத்து அவனுக்கு அழகிய இளமங்கையைத் திருமணம் செய்து கொடுத்து அவளது வாழ்வைப் பாழாக்குவதும். அதற்கு, “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்று விளக்கம் கூறுவதும் நம்மிடையே வேரூன்றியிருக்கும் கொடுமையான மூட மரபல்லவா? இதைத் தீர்க்கவேண்டுமென்று பாவலர் அறைகூவல் விடுகிறார். நாம்தான் திருந்த வேண்டும்.  மேற்கூறிய…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28  1.3 பொங்கல் வாழ்த்து   பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பாடியுள்ளார். ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ என்னும் கவிதை முப்பது அடிகளைத் கொண்டது. 1964 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்து என்னும் கவிதை பதினோரு அடிகளையும், 1965 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்துக் கவிதை ஏழு அடிகளையும் கொண்டுள்ளது. ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ புலப்படுத்தும் கருத்துகள் போற்றத்தக்கன. உழவையும் தொழிலையும்…

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 Thamizh Academy Awards – 2016 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited)   திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக…

ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!

ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!   வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 அன்று தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து கருணாநிதியாக மலர்ந்து கலைஞராக உயர்ந்துள்ள முதுபெரும் தலைவருக்கு  அதே வைகாசி 21 / சூன் 03 இல் 93 ஆம் பிறந்தநாள் பெருமங்கலம் வந்துள்ளது. தம் உரைகளாலும் எழுத்துகளாலும் படைப்புகளாலும் கோடிக்கணக்கான மக்களிடையே தமிழ் உணர்வை விதைத்து உரமூட்டியவர் என்ற நன்றிக்கடனால் மக்கள் இன்றும் அவருக்கு ஆதரவு தருகின்றனர். ஆளும் கட்சியாளராக ஆகவில்லை  என்ற வருத்தமும் வலிமையான எதிர்க்கட்சியாளரான…