இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 1.2 புலவர் வாழ்த்து   தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.   திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன….

பலவகை மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள்

பலவகை மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள்   கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல மரமாகப் போற்றப்படுகின்றது.   தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞீலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி என்று பழந்தமிழர் அழைத்தனர்.   இன்னும், வாகையும் புன்னையும் வட ஆர்க்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும்,…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி)   தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்:         எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை            ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய்.        கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால்            கால்முளைத்து நடந்திடுமா உன்றன்…

மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு: 1/ 2 : தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து – நூல்களின் பங்கு 1/ 2   “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு”             (குறள் 783)   நூல்களைப் படிப்பவர்களுக்கு,    அதிலுள்ள நற்பொருள்கள் சிறுகச் சிறுக விளங்குவதுபோலப், பண்புள்ளவர்களுடன் செய்துகொள்ளும் நட்பு, அவருடன் பழகப்பழக இன்பம் அளிக்கும்.   நூல் ஒரு சிறந்த நண்பன், சிறந்த ஆசிரியர், சிறந்த அமைச்சரைப்போல் அறிவுரை கூறி வழிகாட்டும். நூல் என்பது சிறந்த இலக்கிய நூல்களை மட்டும் சுட்டவில்லை. இறைநெறி நூல்கள், வரலாற்று நூல்கள், உளவியல், தத்துவம், புதின நூல்கள்,…

‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்

‘இலக்கியச் சோலை’ மாத இதழ் சார்பில் தந்தையர்நாள் நிகழ்ச்சி வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை, சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது.   ‘அப்பா –  அப்பப்பா’ தலைப்பில் கவியரங்கம்.   நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க:  98405 27782.

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில!  இப்போதைய – தி.பி.2047 / கி.பி. 2016 ஆம்  ஆண்டுச் – சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி  செயலலிதாவிற்கு வாழ்த்துகள்!   ‘பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி.   ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் மக்களாட்சியில் இதுதான் வெற்றி.   மொத்தத்தில் மிகுதியான வாக்குகள் பெற்றுச் சில இடங்களில் வெற்றி பெற்ற கட்சியைவிட…

மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.  (திருவள்ளுவர், திருக்குறள் 772)   தமிழகச் சட்டமன்றங்களில் தொடர்ந்து இரு கட்சிகளின் முதன்மைகளுக்கு மாறாக அவ்வப்பொழுது 3 ஆம் அணி உருவாக்கம்பற்றிய பேச்சும்  முயற்சியும் வந்துபோகும். என்றாலும், இந்தமுறை சீர்குலைப்பு முயற்சிகளையும் மீறி மக்கள்நலக்கூட்டணி உருவானது.   முன்பு இருந்த சூழலைவிட இம்முறை மக்கள் பெரிதும் மாற்றத்தை விரும்பியது உண்மை. இருப்பினும் மக்களின் நேர்மை உணர்வு அதற்கு எதிராக அமைந்துவிட்டது. முதலில் பணம்  கொடுத்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு…

திமுகவின் கைகளில் கடிவாளம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுகவின்  கைகளில் கடிவாளம்!   நம்நாட்டு மக்களாட்சி முறைக்கேற்ப  ஆட்சியை அமைப்பதற்கான வெற்றி வாய்ப்பை திமுக இழந்து உள்ளது.   9 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வேறுபாட்டிலும் மேற்கொண்டு 9 தொகுதிகளில் ஆயிரத்திலிருந்து 2615 இற்குக் குறைவாகவும் மேற்கொண்டு 14 தொகுதிகளில் இதிலிருந்து 5000த்திற்குக் குறைவாகவும் வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களுள் மிகுதியானவர் தி.மு.க.வினர்.  இதனால் திமுக அணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.  எனினும் மிகுதியான (98) ச.ம.உ.உடைய எதிர்க்கட்சியாக மாறி உள்ளது.   இனப்படுகொலை நேரத்தில்  கலைஞர் கருணாநிதியின் செயல்பாட்டால் …

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 3.1 திருமண வாழ்த்து  ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை. திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள்,…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250   226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…

பாடம் சொல்லும் முறை – நன்னூல்

பாடம் சொல்லும் முறை ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப நன்னூல்   பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து…

கேட்டல் முறை – பவணந்தி முனிவர்

கேட்டல் முறை ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால் செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும். பவணந்தி முனிவர் : நன்னூல்   பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின்,  மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான். …