தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா! முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ சிறப்பு இருக்க வேண்டும். பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள். முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா? சிவன்: [சிரித்து] முருகா!…

நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில் கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்! ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென் ஆசை தீரவிளை யாடிவந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய் அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்; நேயமுறுப்…

பாரதிதாசனின் 125ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா, பெங்களூர்

பங்குனி 12, 2047 / மார்ச்சு 25, 2016 காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பெங்களூர் தமிழ்ச்சங்கம் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை  

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!  தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.   எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?  …

1 உரூபாய்க் கட்டணத்தில் கணிணிக் கல்வி!

சென்னை, பெரம்பூரில், 1 உரூபாய்க் கட்டணத்தில் கணிணிக் கல்வி!      பெரம்பூரில், ஒரே ஓர் உரூபாய்க் கட்டணத்தில் ஏழை எளியோருக்குக் கணிணிக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.  பெரம்பூர் இலட்சுமி அம்மன் கோயில் தெருவில் இராமானுச அறக்கட்டளை இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மாணவ, மாணவியருக்கான கணிணிச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கணிணிக் கல்வி, சடகோபன் இராமானுசதாசரால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக முதுநிலை அறிவியல் (M.Sc) படிப்பில் தங்கம் வென்ற சத்தியா உள்ளார். இவர் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்காக…

சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!

தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31.   தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…

மாற்றம் – கவிக்கோ ஞானச்செல்வன்

மாற்றம் ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள் காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள் பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ? நெறிகள் மாறா நீணிலத்தில் நிற்பன நடப்பன மாறுவதால்! வறியோர் செல்வர் மாற்றமெல்லாம் வாழ்வின் உண்மை உரைப்பனவே! ஆடைகள் அணிகள் மாறிடினும் அரசியல் கட்சிகள் மாறிடினும் ஓடைகள் யாறுகள் மாறிடினும் உயர்மலை மடுவாய்…

தமிழ்வாணி உதவுவாயே! – புதுமைக் கவிஞர் பாரதியார்

   தமிழ்வாணி உதவுவாயே!  தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே!   -சுப்பிரமணிய பாரதியார் தமிழ்வாணி படம் : நன்றி : தமிழ்வாணி பிரான்சு இதழ் +

கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! – மு.இலெனின் சுப்பையா

கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது!   கானல் நீரில், குடிநீர், மின்சாரம்,  கன்னெய்(பெட்ரோல்), ஏப்புநோய்(எய்ட்சு), புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து, பசிப்பிணி போக்கும் மருந்து, அறுவையின்றி அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து,  தங்கம், வைரம் ஆகியன பெறலாம் என்ற இந்த அனைத்துக் கற்பனைகளும்கூடச் சாத்தியமாகலாம். ஆனால் தேர்தல் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலையும், கையூட்டையும் இந்த நாட்டில் இருந்து அறவே ஒழித்து விடலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளானாலும் இயலாது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி.     இந்த நாடு விடுதலைபெற்று…

சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர்

சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர் ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி      வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்      வீண்சாதி மற்றவெல்லாம். பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்      தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய்      தீர்ப்பாகச் சொல்வதென்ன? பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே      தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய்      தீர்ப்பாய்ப் படைத்தாரடி. பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது      கற்பனை ஆகுமடி குதம்பாய்      கற்பனை ஆகுமடி. சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல்      தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய்     …

தேசியம் – தேசப்பக்தி – தேசத்துரோகம் : கருத்தரங்கம்

  பங்குனி 12, 2047 /  மார்ச்சு 25, 2016  மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை மதுரை   அகில இந்தியர் மாணவர் கழகம், மதுரை

பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி – ‘யாதுமாகி நின்றாள்’

   வணக்கம். ‘யாதுமாகி நின்றாள்’ – மகளிர் நாளை முன்னிட்டுப் பிரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.  காலமாற்றத்திற்கு ஏற்பப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்துப் பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துகள்/மாற்றுக்கருத்துகள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் எனப் பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு : 1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்?…