சின்னஞ் சிறிய குருவி பார்! – தழல் தேன்மொழி

சின்னஞ் சிறிய குருவி பார்! சிலிர்த்துப் பறக்கும் அழகைப் பார்! கன்னங் கரிய குஞ்சுடன் களித்து மகிழும் அன்பைப் பார்! தென்னங் கீற்று ஊஞ்சலைத் தேடி யமரும் அறிவைப்பார்! புன்னை மரத்தில் கூட்டினைப் பொருந்தக் கட்டும் திறனைப்பார்! முன்றிலில் காய் நெல்லினை முனைந்து கொறிக்கும் முயற்சிபார்! சின்ன சின்ன கால்களால் சிலிர்க்க நடக்கும் விரைவைப் பார்! தன்னைத் தானே இயக்கியே தன்னின் குடும்பம் பேணுமே! உன்னை வளர்த்துக் கொள்ளவே உயர்ந்த கல்வி அளிக்குமே! விடுதலை யாய் வாழுமே, வீண் செயல்கள் இல்லையே! அடிமை வாழ்வில்…

மானப்பாவலர் வையவனின் ‘சதுரங்கக் காய்கள்’: நூலறிமுகம்

பங்குனி 14, 2047 /  மார்ச்சு 27, 2016  மாலை 6.00 புதுச்சேரி புதுவை புதிய  தூரிகைகள் மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகம் மானப்பாவலர் வையவனின் சதுரங்கக் காய்கள் நூலறிமுகம்  

தமிழக மலேசியத் தமிழுறவு அறக்கட்டளைச் சொற்பொழிவும் கருத்தரங்கமும்

  பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன் காலை 10.30 மணி சென்னை மறவன்புலவு க.சச்சிதானந்தன் பொழிவு: கம்போடியாவில் காரைக்காலம்மையார் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை தமிழக மலேசியத் தமிழுறவு அறக்கட்டளை

கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…

மேத்தியூ இலீ ஐ.நா-விலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்துக் கூட்டம்!

  ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீ ஐ.நா.-விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்துக் கண்டனக் கூட்டம்! ஐ.நா-விற்குள் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த அகநகர் இதழியம் (Inner city press) என்ற இதழையும் அதன் ஆசிரியரான மேத்தியூ இலீ அவர்களையும் மிகக் கொடுமையாக வெளியேற்றிய ஐ.நா-வைக் கண்டித்துக் கடந்த மாசி 22, 2047 / ௫-௩-௨௦௧௬ (05.03.2016) அன்று மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டனக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்…

புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 2/3

2   அடுத்த நிலையில் கலைஞர்கள் எனும்போது, மிகுந்த கவனத்திற்குரிய சொல்லாகக் ‘கூத்தர்’ என்னும் சொல்லின் அறிமுகத்தைக் கூறலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுக்கண்ணன் சாத்தனாராலேயே இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கவனித்தக்கது என்னவென்றால் பத்துப்பாட்டில் ஒன்றான நச்சினார்க்கினியர் மற்றும் இளம்பூரணரால் ‘கூத்தராற்றுப் படை’ என்று அழைக்கப்படுகின்ற மலைப்படுகடாத்தில் கூட இச்சொல் பயின்றுவரவில்லை. பிற சங்க இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணமுடியவில்லை. ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தியவர் முதுக்கண்ணன் சாத்தனாரே. [‘பூம்போது சிதைய விழ்ந்தெனக் கூத்த/ ராடுகளங் கடுக்கு மகநாட் டையே’ (புறநானூறு:28:13),]  கூத்தராடுகின்ற ஆடுகளத்திற்கு…

பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

பம்புளி என மருவிய பைம்பொழில்     மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…

காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

 கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.   தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…

வாழ்வியல் மருத்துவம் – இருநாள் பயிற்சி, தஞ்சாவூர்

குறிப்புகள்: 1. வாழ்வியல் மருத்துவம் என்பது, மரபுவழிப்பட்ட வாழ்க்கை முறையை அடித்தளமாகக் கொண்டது. உணவுப் பழக்கங்கள் இம்முறையில் இன்றியமையாதவை. 2. புதிய மருத்துவ முறைகளில் கூறப்படும் நோய்களைக் குணப்படுத்துகிறோம் என்ற பேரில் மூலிகைகளையும் வேறு மருந்துகளையும் பரிந்துரைக்கும் வழக்கம் பல்வேறு மாற்று மருத்துவமுறைகளில் உள்ளது. வாழ்வியல் மருத்துவம் இம்முறையை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, புதிய மருத்துவத்தின் ஆய்வுகளை வைத்து, உடலை அணுக விரும்புவோருக்கு இம்முறை பொருந்தாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 3. மருந்துகள் இல்லாமல் வாழ விரும்புவோருக்கும், புதிய மருத்துவ முறைகள் வேண்டா என உண்மையிலேயே விரும்புவோருக்கும்…

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா?   தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…

திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!  திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைத் தொல்லியல் – வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலையில் உள்ள படியூர் அருகே சின்னாரிபட்டி ஊரிலுள்ள கம்பத்தீசுவரர் கோயிலில், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் – வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் க.பொன்னுசாமி, ச.இரஞ்சித்து, இரா.செந்தில்குமார், பொறியாளர் சு.இரவிக்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…