தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை136 & 137; என்னூலரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414)   தமிழே விழி!                                                             தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 136 & 137; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) ஆடி 04, 2056  ஞாயிறு 20.07.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…

வெருளி நோய்கள் 116 -120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 106-110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 116 -120 116.) 911 ஆம் எண் வெருளி – Enniakosioihendecaphobia911 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 911 ஆம் எண் வெருளி.911 என்பதன் இறுதிக் கூட்டுத்தொகை 9+1+1= 11; 1+1= 2 என்பதால் எண் இரண்டின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 9, எண் 1 ஆகிய இரண்டு எண்கள் வருவதால் இவ்விரண்டு எண்கள் மீது பேரச்சம் கொள்வோரும் 911 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00117.) 99 ஆம் எண் வெருளி –…

127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்  விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக் கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை. ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்…

வெருளி நோய்கள் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 106 – 110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 111 -115 111.) 800 ஆம் எண் வெருளி – Octicentumphobia800 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 800 ஆம் எண் வெருளி.எண் 800இல் உள்ள 8 + 0 +0 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 800 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00112.) 87 ஆம் எண் வெருளி – Octokontaheptaphobia/Ogdokontaheptaphobia87 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்…

126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்

(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 126 வால்மீகி இராமாயணம் மூல நூலன்று.  பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்.  திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன்   எலனை…

வெருளி நோய்கள் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 101-105 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 106-110 106.) 700 ஆம் எண் வெருளி- Septicentumphobia700 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 700 ஆம் எண் வெருளி.எண் 700 இல் உள்ள 7 + 0 + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00107.) 71 ஆம் எண் வெருளி – Hebdomekontahenophobia71 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 71 ஆம்…

சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 986-990          986. Audit notes தணிக்கைக்‌ குறிப்புகள்‌ தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும்.  987. Audit of accounts கணக்குகளின் தணிக்கை கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது. கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும். நிறுவனம் அல்லது…

125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(124.கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை) சனாதனம் பொய்யும் மெய்யும் 125 125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? அடுத்து நாம் பார்க்க வேண்டியது மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா என்பது குறித்து. வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான்….

க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர்க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும்,…

124. கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை – இணைப்பு

(சனாதனம் பொய்யும் மெய்யும் – நிறைவான செய்தி தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 124 சமற்கிருத நூல்கள் தமிழ் நூல்களுக்குப் பிற்பட்டவை, தமிழ் இலக்கியக் கருத்துகளைத் திருடித் தமதாகக் காட்டுவன, காலந்தோறும் தமிழ் இலக்கியச் சிறப்புகளைச் சிதைப்பதையும் பொய்யான புகழைச்சமற்கிருத நூல்களுக்கு ஏற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள கூட்டம் இயங்கி வருவதையும் உணர்த்துவதற்கும்தான். அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு என்றெல்லாம் கூறுவோம். இற்றைக்காலத்தில் கோயபல்சு புளுகு என்றும் கூறுவோம். இவற்றையெல்லாம் விஞ்சியது சமற்கிருத நூலார் புளுகுகள். இனி நாம், சமற்கிருதப் புளுகு என்றோ சமற்கிருத நூலார் புளுகு…

வெருளி நோய்கள் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் தொடர்ச்சி) 101.) 62 ஆம் எண் வெருளி- Hexekontadyophobia62 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 62 ஆம் எண் வெருளி.எண் 62 என்பது வணிகம், பணம் தொடர்பான எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, எதிர்மறை எண்ணத்தில் வணிகத்தில் தோல்வி, பண இழப்பு வரும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.கிரேக்கத்தில் hexḗkonta என்றால் 60, dyo என்றால் 2.00102.) 666 ஆம் எண் வெருளி – Hexakosioihexekontahexaphobia666 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த…

வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள்

(வெருளி நோய்கள் 96 -100 தொடர்ச்சி) வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் 21.  ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia ‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி. வண்டி ஓட்டும் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதன் அடையாளமாக ‘எல்’(L) என்னும் பயிலுநர்(Learner) பலகை மாட்டி ஓட்டுவர். பயிலுநர் பலகையைக் கண்டு சாலையில் செல்லும் பிறருக்கும் அச்சம் வந்து அதனால் ‘எல்/L’ எழுத்து மேல் பேரச்சம் வருவதும் இயற்கைதான்….