தனித் தமிழ்ப் படையின் தளபதி – நெல்லை க.சொக்கலிங்கம்
தமிழ் தொன்மையும் தோலாப்புகழும் மிக்கதொரு மொழியாம் இனிமையும் எளிமையும் கொண்ட செந்தமிழ் தனித்தியங்கும் தகைமையும் தகுதியும் பெற்ற பண்பட்ட மொழி என்று கால்டுவேலர் போன்ற மேனாட்டார் ஏற்றிப் போற்றும் கூற்றினை மேற்கொண்டு தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு தமிழ் மாற்றாரின் படை எடுப்பால், வேற்று மொழிகளின் தாக்குதல்களால் புறக்கணிக்கப்பெற்றுப் போற்றுவாரற்றுக் கிடந்த காலத்தில்தான் எழுச்சி கொண்ட இயக்கம் துவண்டெழுந்தது. தனித்தியங்கும் வலிவும் பொலிவும் மிக்க தண்டமிழ் தரணியாளும் பொறுப்பிழந்து தாழ்ந்து கிடப்பதை நீக்கி, அரியணை ஏற்ற ஆட்சி செலுத்துமாறு அணிபெற வைத்தவர்கள்…
கண்ணீர்ப் பெருக்கினைக் காண் – கவிஞர் முத்தன்
கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே! புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ – இத்தரையில் மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும் நத்திச் சுவைத்தாய் நன்று. பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே! தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ பறந்தாய் மறைந்தாய் பகர்! கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத் திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல் ஒருவிளக் குண்டோவுரை! பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் – மாங் காட்டுக் குயிலரசே! காதலினால் – நாட்டிலுறு கேடுகளைப் போக்கக்…
பேரிழப்பு – முத்தமிழ்க் கவிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்
கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய இழப்பு, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நேர்ந்த ஒரு பேரிழப்பு. அதுவும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அடுத்தடுத்து நல்லறிஞர்கள் பலரை தமிழகம் இழந்து வருவது பெரிதும் வருந்தத்தக்க ஒன்று. பாரதிதாசன் அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன். அவர் இளமையிலேயே தமது ஆசிரியர் தொழிலையும் கைவிட்டு நானறிய நாற்பது ஆண்டுகளாக நற்றமிழுக்கு நற்றொண்டு புரிந்து வந்த நல்லறிஞன். அது மட்டுமல்ல. கவிதை உலகில் ஒரு புதிய திருப்பத்தையே உண்டாக்கிவிட்ட அரும்பெருங் கவிஞன். …
பைந்தமிழ் போற்றிய பாவேந்தர்
பெயர் – ஊர் – பெற்றோர் : பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். புதுவை (புதுச்சேரி)யில் பெருவாணிகரான கனகசபை (முதலியாரும்(, இலக்குமி (அம்மையாரும்( இவரின் பெற்றோர்கள். புனைபெயரும், காரணமும்: இவர் புனைபெயர் ‘பாரதிதாசன்’ என்பது. மதுரையில் ‘தேசோபகாரி’ என்ற நாளேட்டில் முற்போக்குக் கொள்கைப் பற்றிப் பாட்டு எழுதி வந்ததைப் புதுவை அரசு எதிர்த்தது. இவர் அரசினர் ஆசிரியர் ஆதலால்! இவர் தம் கொள்கையை மறைத்துக்கொள்ள விரும்பவில்லை; தம் இயற்பெயரைப் புனைபெயரில் மறைத்துக் கொள்ள எண்ணினார். இவர் தமக்கொரு புனைபெயர் தேடும்போது, தம் நினைவில்…
தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்!
தமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப. (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்! தமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் பாடுபட வாழ்த்துகிறோம்! கல்வியகங்களில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தமிழர்க்கான தமிழர்களின் கோயில்களில் தமிழே வழிபடுமொழியாக இருக்க வேண்டும்! தமிழில் பிற மொழி…
திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு
மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். “தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார் கள ஆய்வுமேற்கொண்டார். அப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை…
சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது. தமிழ் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த அங்கமாகக் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவமணிகள் கலந்து கொண்ட மாறு வேடப்…
வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்
குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத்…
இணைவதை யாராலும் தடுக்க முடியாது – கலாநிதி இராம் சிவலிங்கம்
புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது — கலாநிதி இராம் சிவலிங்கம் விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காகப் போராடும்போது, எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது குடிவழி எம்மை மதிக்குமா…
மாமூலனார் பாடல்கள் – 14 : சி.இலக்குவனார்
(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) கச. மொழிபெயர் தேயத்தராயினும் நல்குவர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ( பிரிவின்கண் வேறுபட்டுள்ள தலைவியும் தோழியும்) தோழி: ஏடி! இவ்விதம் வாட்டமுற்று வருந்துகின்றாய். மேனி பொலிவு அழிந்துவிட்டதே. தலைவி: நீகூட இதன் காரணத்தைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாயோ? தோழி: இல்லையம்மா! சென்றவர் திரும்பும் வரையில் ஆற்றியிருத்தல்தானே நமக்கு அழகு. தலைவி: ஆமாம். அவர் எந்த நாட்டுக்குச் செல்வதாகக் கூறினார்….
தமிழ்ப் பெருங்காவலர் வள்ளல் கா.நமச்சிவாயர் – சிறுவை நச்சினியார்க்கினியன்
வள்ளல் கா.நமச்சிவாயர் என்று விளித்தால்தான் தமிழ் உள்ளங்கள் குளிரும் ஏன்? வள்ளல் என்று சொன்னால் மட்டும் சில உள்ளங்களுக்கு முழு நிறைவு அளிக்காது. அவரைத் தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாளனுக்கே அறிந்தோர் ஒப்பிடுவர். பௌராணிகக் காலத்தில் தோன்றி இருந்தால் தமிழ் அன்னையே இம்மண்ணுலகில் சில நாள் தங்க எண்ணி வந்தனள் எனக் கூறி இருப்பர். இக் கூற்றுகள் அனைத்தும் உயர்வு நவிற்சியின் பாற்பட்டன அல்லவே அல்ல; முற்றிலும் உண்மை. காரணங்கள் ஆயிரம் ஆயிரம்; உவமைகளோ நூற்றுக் கணக்கின. ஆனால் அந்த வள்ளல் இப்புவியில்…
தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 2 : முனைவர் இராம.கி
இக்கருத்தரங்கில் தமிழ்ப்பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப்பெயர்களை ஒரேவகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக்கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர், தி.இரா.நி.பல்கலைக்கழகம் பேரா.வி.செயதேவன், முதன்மைப் பதிப்பாசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சீராய்வுத் திட்டம் பேரா.முருகையன், பேராசிரியர்(ஓய்வு), அண்ணாமலைப்பல்கலைக்கழகம் முனைவர் மா.பூங்குன்றன், பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன், பதிப்பாசிரியர்,செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…
