தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை

தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவில் ம.இராசேந்திரன் உரை கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும்  இணைந்து  கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன.. இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச்,   சென்னை  எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 108 – அத்தியாயம்-70 . புது வீடு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 107 – இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-70 புது வீடு திருவாவடுதுறையில் திருக்குளத்தின் வடகரையில் கீழ் மேலாக ஓர் அக்கிரகாரம் உண்டு. சுப்பிரமணிய தேசிகர் உத்தரவால் அதன் வட சிறகில் கீழைக்கோடியில் இரண்டு கட்டுள்ள வசதியான வீடு ஒன்று அமைக்கப் பெற்றது. மடத்திலிருந்து நல்ல சாமான்களை அனுப்பி அவ்வீட்டைத் தேசிகர் கட்டுவித்தார். அது கட்டி முடிந்தவுடன் தேசிகரே நேரில் வந்து அதனை ஒரு முறை பார்வையிட்டுச் சென்றார். “அவ்வீடு எதற்காகக் கட்டப்படுகிறது?” என்பது ஒருவருக்கும் வெளிப்படையாகத்…

சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன்

சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன் உரை தமிழ் வளர்ச்சி மன்றம், ஆத்திரேலியா இணையவழிக் கூட்டம் நாள் – புரட்டாசி 27, 2055 / 13.10.2024 காலம் – தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 ஆத்திரேலியா நேரம பிற்பகள்3.00

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,  7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்  உ.ஏமம் 3. கல்வி ஏமம்                     “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398) இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும். கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும். கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப”…

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு, சென்னை

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528) தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தொல்காப்பிய விருதுகள், இலக்குவனார் விருதுகள் வழங்கலும தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வெளியிடலும் நூல்கள் வெளியிடலும் ஆகிய தொடர் விழா சென்னையில் நடைபெற…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,  6. உ.ஏமம்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் உ. ஏமம் ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன. நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும். இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும். திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும், அரண்களையும், ஆட்சித்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின            பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச்         25           சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின;           இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30           வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 831. Advantage, Collateral   கூடுதல் ஆதாயம்   ஓர் ஒப்பந்தத் தரப்பார், தம் வலிமையான பேரம் பேசும் ஆற்றலைப் பயன்படுத்தித் தனக்கு /தமக்கு ஆதாயமான/சாதகமான கூறுகளைச் சேர்த்துக் கொள்வது. பெரும்பாலும் விகிதச் சமமற்ற முறையில் அவருக்கு வழங்கப்படும் நன்மைகளுக்கு மேல் கூடுதலாகப் பெறும் வகையில் விகிதத்தைச் சேர்த்துக் கொள்வது. இவ்வாறு பெறும் கூடுதல் ஆதாயம். 832. Adverse Comment எதிர்மக் கருத்து   யாரைப்பற்றியோ / எதைப்பற்றியோ…

அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 30-32

(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 27-29-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 30. மோட்சமும் நரகமும்! மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா – நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து வா” என்றாள். மறுநிமிடமே, அவள் திரும்பிவந்து, “அம்மா, அந்த ஆன்மா மோட்சத்துக்குப் போய்விட்டது” என்று சொன்னாள். இவற்றையெல்லாம் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி,…

சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) 821. Adopted Child மகற்கோடல்  குழந்தை   மகற்கோடல்  என்பது உணர்ச்சி சார்ந்த மன்பதை, சட்டபூர்வச் செயல்முறையாகும்.   இதன் மூலம், பெற்றெடுத்த பெற்றோரால் வளர்க்கப்படாத குழந்தைகள் மற்றொரு குடும்பத்தின் முழுமையான நிலையான சட்ட உறுப்பினர்களாக மாறுகிறார்கள். அஃதாவது மகற்கோடல்  குழந்தையின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் மகற்கோடல்  பெற்றோருக்கு நிலையாக மாறும். மகற் கோடல் என்பது மகவைக் கொண்ட என்றும் மகவாகக் கொள்ளப்பட்ட என்றும் இரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காண்க: Adoption…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 107 – இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் – 69 இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும் நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும் பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில்…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,  5. ஈ. இன்பம்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்ஈ. இன்பம் மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.“நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்றுஅப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு“[26]என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.“ஊடுதல்…