தமிழ் வரிவடிவம் காப்போம்! – 4
தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தமிழை அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்! சோமன் பாபு (Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் கொடுத்தோமானால் நாளை??? சிவனேசுவரி தியாகராசன் (Shivaneswari Thiyagarajan) இன்று உன் எழுத்தை மாற்று என்பர்; நாளை உன் மொழியை மாற்று என்பர்; நாளை…
விசயகாந்திற்கு வாழ்த்துகள்!
விசயகாந்து எடுத்த முயற்சி பாராட்டிற்குரியதே! ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு. காங்கிரசிற்கு எதிரான அலை வீசும் தில்லியில் காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும் துணிவு எப்படி வந்தது? காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா? தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பா? காங்கிரசுடன் சேரத்துடிக்கும் ஒருவருக்குக் காங்கிரசை வீழ்த்த நினைப்போர் எங்ஙனம் வாக்களிப்பர்? காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன் பரப்புரை மேற்கொண்டிருந்தால் அவர் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மிகுதியாய் இருந்திருக்கும். இனியாவது அவர் திருந்தட்டும்! தமிழ், தமிழர் நலன்…
ஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !
த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் இந்திய அரசு பாதுகாப்புத்துறை நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது. இதில் தையல் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடைபெற்றது. வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….
மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!
இதழுரை முதுமையில் இறந்திருந்தாலும் நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும் ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது. எதனால் அவர் நலங்குன்றிப் போனார்? இன மக்களுக்காக ஏற்ற சிறைவாழ்க்கைதானே காரணம்? சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார்! இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா? எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால் பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள் எனலாம்….
ஏற்காடு இடைத் தேர்தல்: அதிமுக வெற்றி – பரிசும் தண்டனையும்
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோசா 1,42,771 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைவிட 78116 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாறன் 64, 655 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கை விடச் சற்றுக் குறைவே. வேறு முதன்மைக் கட்சிகள் போட்டியிடாத சூழலில் தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெறும் என எண்ணியவர்கள் ஏமாற்றத்தைத் தழுவினர். மூன்றாம் இடத்தில் வாக்கு அளிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை 4,431 ஆகஇடம் பெற்றுள்ளது. இனி், ஒவ்வொரு தேர்தலிலும் இப்பிரிவிற்கான வாக்கான எண்ணிக்கை…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 4
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.3. மகப்பேறு குழந்தைப் பிறப்பு வரவேற்கப்பட்டது. திருமணத்தின் இயல்பான விளைவு குழந்தைப் பிறப்பேயாகும். அவர்கள் உடற்கூற்று அறிவியலை நன்கு அறிந்திருந்தமையால் உடல் உடலறவு காலத்தை நன்கு கண்டறிந்ததுடன் குழந்தை பிறப்பையும் தம் கட்டுபாட்டில் கொண்டு இருந்தனர். அவர்கள் மிகுதியான குழந்தைகள் பெறுவதை வரவேற்றனர் எனத் தெரிகிறது (பொருள் 187). குழந்தைகள் மகிழ்ச்சிக்கான வாயிலாகக் கருதப்பட்டனரே யன்றி சுமையாகக் கருதப்படவில்லை. கணவருக்கும், மனைவிக்கும் எப்பொழுதேனும் நேரும் ஊடலை தீர்ப்பதற்கு அவர்கள் முதன்மை பங்கு வகித்தனர். (பொருள். 147) 3.4. கல்வி…
மாவீரர் உரைகளின் மணிகள் சில! 3
இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகாரப் பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன? தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா? தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா? ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப் பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது. தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை…
மதுவிற்கு அடிமையாகும் மாணாக்கியர் – வைகோ கவலை
திருநெல்வேலி: “ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், மதுக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது’ எனக், கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில், த.மா.வா.க.(‘டாசுமாக்’) மதுபானக் கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி உரூபாய் வருமானத்திற்காகத் தமிழக அரசு, பண்பாட்டைக் குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக…
10, 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணைகள்
கருத்தூன்றிப் பயிலுக! கவனமாக எழுதுக! சிறப்பாகத் தேர்ச்சி பெறுக! வாழ்வில் உயர்க! என மாணாக்கர்களை ‘அகரமுதல’ வாழ்த்துகிறது! + 2 தேர்வு அட்டவணை தேர்வு நேரம்: காலை 10.00 மணி – நண்பகல் 1.15 மணி நாள் பாடம் மார்ச்சு 1 மொழித்தாள் 1 மார்ச்சு 4 மொழித்தாள் 2 மார்ச்சு 6 ஆங்கிலம் 1 மார்ச்சு 7 ஆங்கிலம் 2 மார்ச்சு 11 இயற்பியல், பொருளியல் மார்ச்சு 14 கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு…
சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் அரசு முனைப்புடன் வாதாட வேண்டும் : கலைஞர்
தமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி…
பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு… போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…
தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்
கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான சொத்துக்களைக் கவர்ந்து, ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள் மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…
