ஆளுமையர்உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்     

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௯௰௪ – 394) ஆளுமையர் உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம் தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆவணி 02, 2055 ஞாயிறு 18.08.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்           தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் மக்கள் கல்வி…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்- தொடர்ச்சி) பூங்கொடி பொன்னியின் செயலறு நிலை           இந்நினை வதனால் ஏங்கி மெலிவது                கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம்    50           கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச் செயலறக் கிடந்தனள் மயலது மிகவே;  பொன்னி காதலனிடம் செய்தி கூறல்           இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி 55           நினைந்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே; விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 621. Act, nature of the இயற்கையின் செயல்   இயற்கைச் செயல் இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். சான்றாக இதனால் கட்டடங்கள் சிதைந்தன எனில், இதற்குக் கட்டுமானர் பொறுப்பாக மாட்டார்.   ‘சட்டத்தின் தன்மை’ எனக் குறிக்கப்படுவது தவறாகும்….

தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு

(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌-தொடர்ச்சி) தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 3. செருமானியத் தமிழ்ச் சான்றோன் சீகன்பால்கு (1682-1719) கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் பணி புரிந்துள்ளார். நேர்மையாளருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும் என்று கிறித்தவம் என்னும் நூல் வழியாக நவின்ற சீகன்பால்கு, தாய்மொழி வாயிலாகப் பிறமொழியைக் கற்று புலமைபெற…

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 10 -12

(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 7. பொன்னும் பொரிவிளங்காயும், 8. வீண்பேச்சு  & 9. போகாத இடம்-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 10. விக்டோரிய மகாராணியும் ஐந்தாம் சியார்சும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்குடோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் சியார்சை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஐம்பது பவுன் மாதந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார். ‘தன் செலவுக்கு இந்தப் பணமும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 611. Act of terrorism வன் செயல்   பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம்.   இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம்.   தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 62 தொடர்ச்சிசங்கீத ஒளடதம் நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது. மணிமந்திர…

அறிவியல்திருவள்ளுவம், கோவைஇளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் 2. நாட்டிற்கு ஐந்துஅறிவியல் பதினான்கு அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஓரறி உயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது. திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார்….

இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல், ஆத்திரேலியா

தமிழ் வளர்ச்சி மன்றம் அறிவியல் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல் நாள்: ஆடி 26, 2055/ 11.08.2024  இந்திய நேரம்: காலை 11.00 ஆத்திரேலியா நேரம் பிற்பகல் 3.30 இணைப்பு : https///streamyard.com/ காணொளி  https://streamyard.com/zyc6m6bfm5

தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! I இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை – செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி முற்றம் தொலைக்காட்சி

சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச்  சொற்கள் விளக்கம் 601-610   601. Act of honour     நன்மதிப்புச் செயல்   நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும். 602. Act Of Indemnity     இழப்பீட்டுச் சட்டம்   இழப்பீட்டு ஒப்பந்தம்   வழுவேற்புச் சட்டம்   ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது சட்டத்தைக் குறிக்கிறது; செயலை அல்ல.   வாக்குறுதியளிப்பவரின்…