தேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்

தேனி மாவட்டத்தில்   சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்   தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குற்பட்ட குள்ளப்புரம் பகுதியில் சூறாவளிக்காற்றால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் வீசுவதால் அறுவடைக்கு   ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பூமியில் விழுந்து உள்ளன. இதனால் பல நூறாயிரம் மதிப்புள்ள நெற்பயிர் வீணாயின. தேவதானப்பட்டிப் பகுதியில் இயற்கைச் சீற்றத்தால் வாழை, கரும்பு,…

வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு – வைகை அனிசு

வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு   தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.   இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள்…

தேவதானப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி

தேவதானப்பட்டியில்  ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி தேவதானப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில்  ஆழ்துளைக் கிணறு மோசடி நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள 17 ஊராட்சிகளுக்கும் வறட்சித் துடைப்புத்திட்டத்தின் கீழ்ச் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ்  உரூ1.50  இலட்சமும், ஆழ்துளைக்கிணறு,   தரைத்தொட்டி அமைப்பதற்கு  உரூ. 2.25  இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் அதற்கான பணி வழங்கப்பட்டது. இதில் சில ஊராட்சிகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு வரும் குடிநீர்க் குழாய் இணைப்பைத் தோண்டி அதிலிருந்து இயந்திரம்…

காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 2

2   மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உழவிற்கு அடுத்தபடியாக விளங்குவது கால்நடை வளர்ப்புத்தொழில்தான். இந்த இரு மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளமையால் கால்நடை வளர்ப்பதைப் பரம்பரைத் தொழிலாக வைத்துள்ளனர். தற்பொழுது கோடை மழை பெய்து நின்றுவிட்டதாலும் அணைகள், அருவிகள் அனைத்தும் நிரம்பி விட்டதாலும் இப்பகுதிகளில் உள்ள வேளாண் பூமிகளில் நெல், கரும்பு, தக்காளி, வாழை முதலான பயிர்த்தொழிலும், மானாவாரிப் பகுதிகளில் விதைகள் விதைப்புப் பணி தொடங்குகிறது. எனவே ஆடு, மாடுகளை மேய்க்கக் காட்டுப்பகுதிகளைத்தான் நாடிச்செல்லவேண்டியுள்ளது. இவற்றைத்தவிர வனப்பகுதி,…

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தொப்புள் கொடி உறவுகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தொப்புள் கொடி உறவுகள்   அரசியல் தலைவர்கள் தேர்தலில் வாக்கு திரட்டுவற்காக வாக்காளர்களிடம் என் இனிய தொப்புள் கொடி உறவுகளே என அழைப்பது வழக்கம். தாய்க்கும் மகளுக்கும் அல்லது தாய்க்கும் மகனுக்கும் சண்டை நடந்தால் இன்றோடு உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது என்று வசைபாடுவதும் உண்டு. தூய்மையான தொப்புளைக் காண்பித்து நடிகைகள் பாடல்களில் ஆடுவதும், தொப்புளின் மீது பம்பரங்கள் விடுவதும் அதன் மரபைச் சிதைக்கும் ஒருவகை. தொப்புள் பகுதியை இப்பொழுது விளம்பரங்களிலும், திரைப்படப் பாடல்களிலும் பாலுணர்ச்சி தூண்டும்;…

பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் : 01

   ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற தொடருக்கேற்ப தெய்வத்திற்கு முன்னர் குருவை மூன்றாம் இடத்தில் வைத்துப் பண்டைய காலத்தில் குருகுலக்கல்வியிலிருந்து கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் ஆங்கில மோகத்தின் காரணமாக நாம் நம்முடைய குழந்தைகளைப் பதின்நிலைப்பள்ளி(மெட்ரிக்குலேசன்,) மத்தியக்கல்வி வாரியம்(சி.பி.எசு.இ) எனப் பல வகையான பள்ளிகளில் சேர்த்து வருகின்றோம். இதனைப் பயன்படுத்தி பள்ளி – கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை அடிமையாக்கியும், மாணவ, மாணவிகளைக் கொத்தடிமை போலவும்நடத்தி வருகிறார்கள். விளைவு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் பாதி மனநிலை பாதிக்கப்படும் நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளப்படுகிறார்கள். பணங்காய்ச்சி…

தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதி!

தேவதானப்பட்டியில்  விடுதலை நாளன்று  மதுவிற்பனை  மிகுதி! தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை  மிகுதியாக  நடைபெற்றது. தேனிமாவட்டத்தில் விடுதலை நாளன்று மதுபானக்கடைகள் அனைத்திலும் மது விற்பனை செய்யக்கூடாது என அரசாணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அரசு- தனியார் மதுபானக்கடைகளில் மதுபான விற்பனை  வெகுவாக நடைபெற்றது. தேவதானப்பட்டியில் உள்ள தனியார் மதுபானக்கடை, வடுகப்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடை, குள்ளப்புரம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனை  எனப் பரலாவகவும் மிகுதியாகவும் நடைபெற்றது. ஒரு  குப்பிக்கு உரூ.50 வீதம் கூடுதலாக…

அ.வாடிப்பட்டி ஊரட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் விழா

அ.வாடிப்பட்டி ஊரட்சியில்  விடுதலை நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமால பிச்சைமணி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டார். அதன்பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி, புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி   மாணாக்கர் கலந்து கொண்டனர்.

கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு – ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு

கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு  ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில்  ஊரவை(கிராம சபை)க்கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் அப்பாசு தலைமை தாங்கினார்.   இதே போல   க.கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் வளையாபதி, முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் முத்துப்பாண்டி, எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் பழனியம்மாள்,  செயமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் சங்கரலிங்கம், சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புலெட்சுமி, அ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி,  தே.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்…

தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம்

தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டியில் சாவெடு அறக்கட்டளை (SAWED Trust), தேனி அரவிந்து கண்மருத்துவ மனை இணைந்து இலவசக் கண் மருத்துவ முகாம் நடத்தினார்கள். இந்தக் கண்மருத்துவ முகாமில் சாவெடு அறக்கட்டளை நிறுவனர் எம்.எசு.அபுதாகிர், களப்பணியாளர்கள் ஞானசேகர், பிச்சை முத்து, அரவிந்து கண் மருத்துவமனையைச் சேர்ந்த செயராஜ,இராதா மணவாளன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணில் நீர் வடிதல் முதலான நோய்களுக்குப் பண்டுவம் அளிக்கப்பட்டது. இம்முகாமில் ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில்…

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை   பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மள்ளர்நாடு அமைப்பின் சார்பாக மாநில கொள்கைப் பரப்புச்செயலாளர் செய்தியாளர்களுக்குச் செவ்வி ஒன்றை அளித்தார். அச்செவ்வியில் பின்வருமாறு கூறினார்: – அறவழிப்போராட்டத்தின் வழியாகப் போராடி வந்த மதிப்பிற்குரிய சசிபெருமாள் மரணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபானக் கடைகளின் முன் குடிப்பவர்களின் ஒவ்வொரு காலிலும் மறுபயன் எதிர்பாராமல் விழுந்து குடிக்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டு கொடூரமான அரக்கனான மதுவுக்கு எதிராகப் போராடி வந்த அவரின் இழப்பு என்பது காந்தியக் கொள்கைகளுக்கு ஒரு கரும்புள்ளியாகவம்…

காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 1 – வைகை அனீசு

வனப்பகுதியில் ஆடுகள் மேய்க்கத் தடை   பொதுவாக மக்களை மூவகையாகப் பிரிப்பர். முதலியர், இடையர், கடையர் என்ற பிரிவினர். கால்நடைகளை மேய்த்தவர்களை இடையர் – வேட்டுவ வாழ்வுக்கும் உழவு வாழ்வுக்கும் இடைப்பட்டவர் என்பர். ஆயர், மேய்ப்பர் என்ற சொற்கள் கிறித்தவச் சமயத்துடன் தொடர்புடைய சொற்களாக மாறிவிட்டன. ஆயம் என்பது மந்தை என்ற பொருள் கொண்டது. ஆடுகளை மேய்ப்பவர் ஆயர் எனவும் அழைக்கப்படுவர். இதேபோன்று தொழு, தொறு, தொழுவம், தொழுவர், தொழுதி எனவும் உள்ளன. பட்டினப்பாலையில் 281ஆம் அடியில் வரும் ‘புன்பொதுவர்’ என்னும் தொடருக்குப் ‘புல்லிய…