வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி உலக அளவில், வலையொளி வழியாக தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது. வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம் இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான…

உலகத்தமிழாராய்ச்சிமாநாடு, புதிய கால அட்டவணை

செய்தி மடல் – Newsletter     மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு, வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை பின்வருமாறு 1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022.2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022.3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 5. விபுலானந்த அடிகளார் ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள்…

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! –  தோழர் தியாகு

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி  வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று.  ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து…

திலீபன் சாகவில்லை!  – யோ புரட்சி

திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென‌ தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…

மணமக்கள் தமிழ்நடைப்பாவை – மார்க்கு இணையர் வாழ்கவே!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேத்தி தொல்தமிழ் எழுத்துருக்கள், சேது பிழை திருத்தர், பேராசிரியர் இலக்கணப் பேராசான், கலைஞர் அகரமுதலி எனப் பல முன்னோடி தமிழ்க் கணினிச் செயலிகளை உருவாக்கிய கணிஞர் வா.மு.சே. கவிஅரசன் – முத்துமாரி இணையர் திருமகள் தமிழ்நடைப்பாவைக்கும் திருநிறை செல்வன் மார்க்கு என்பாருக்கும் வரும் ஆவணி 24இல் (9-9-2022)  நடைபெறும் திருமண நிகழ்விற்குப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  – பேரா.சுபத்திரா ஆகியோரின் வாழ்த்து திருமணம், முன்னதான வரவேற்பு ஆகியவற்றை இணைய வழியில்காண: சேது காணொலி இணையக் காட்சி : SethuWebTV- YouTube-Live                    https://www.youtube.com/channel/UCPFM6TRrAeu8GOFik0jY8Ewநேரலை நேரம் : திருமணம்              :…

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர் வாலை யறுத்திட வாராயோ-வரும் வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை மேலும் குவித்துடன் தாராயோ சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை சேரு மிடைப்பகை தீராயோ-உனை வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட வாரி நிதிக் குவை தாராயோ ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர் ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின் வேட்டி லவர்தலை போய்விழுமே! வீடு விளங்கிட பெற்ற குழந்தையை நாடு விளங்கிடத் தாராயோ-அவர் பீடு விளங்கிடக் கேடு களாந்திடப் பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ! தங்க…

தமிழ்க் கவிதை – கவிஞர் க.பெருமாள்

தமிழ்க் கவிதை எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்தபதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடமெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடமமெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடயான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!  வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்றவழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்கஅருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாயசூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பாருண்டோ!யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்! துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்குமதொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்நிறைவான…

இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் – தேமொழி

இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே…