தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை &  கொழும்பு

புரட்டாசி 17, 2049 புதன் அட்டோபர் 03, 2018 மாலை 4.30 பேராதனை பல்கலைக்கழகக் கலையகம் புரட்டாசி 21, 2049 புதன் அட்டோபர் 07, 2018 மாலை 4.30 கொழும்பு புதிய நகர மண்டபம்   தாவீது நோர்த்து உரைகள்   சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத்திற்கு  வழங்கிய தொடக்க அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத் தீர்மானம் நான்காம் குழுவின் அனைத்துலக வலைத்தளம்  

திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்

திலீபன் மண்ணுக்காக இறந்தான்  – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி   “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….

பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு

  புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00 உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ [32 ஆம் பேரவைத்தமிழ் விழா,  சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா] ஆனி – 18-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 3 – 7, 2019 விவரங்களுக்கு :  icsts10.org   / www.iatrnew.org  / iatr2019@fetna.org

எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்

எம்மை மகிழ்விப்பாய்!   என் எழுதுகோல் களத்தில் உன்பெயர்தான் முளைக்கிறது என் இதழ்ச் செடியில் உன்பெயர்தான் பூக்கிறது என் மன ஊஞ்சலில் உன்பெயர்தான் ஆடுகிறது என் கண்ஆடிகளில் உன்பெயர்தான் தெரிகிறது என் செவி மணிகளில் உன்பெயர்தான் ஒலிக்கிறது என் புத்தகத் தோட்டத்தில் உன்பெயர்தான் மணக்கிறது என் இல்லக் கோயிலில் உன்பெயர்தான் குடியுள்ளது என் எண்ண வானத்தில் உன்பெயர்தான் பறக்கிறது என் வாணாளில் நீ வந்து எம்மை மகிழ்விப்பாய்!   – இளவல்  

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !    எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள்…

தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !

விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : தலைமையர் வி.உருத்திரகுமாரன் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை.  ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது…

மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி  இரவு 2018

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி  இரவு 2018   திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு  பெற்றுப்  பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர  நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி  இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து  ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை  நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு  அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில் …

எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

உச்சநீதிமன்றக் கருத்திற்கு இணங்க எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும்        இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்படடவர்களுக்குத் தண்ட னையே வழங்கியிருக்கக்கூடாது.   வழங்கிய பின்னரும் வழக்கு தொடர்பானவர்கள் முறையற்ற வழியில் இவர்கள் தண்டிக்கப்படடதைத் தெரிவித்த பின்னராவது எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். விடுதலைக்கான பல வாய்ப்புகள் வந்தபின்னரும் மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.   இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்வது மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர்கள் செய்தது ஒப்புமைப்படுத்த முடியாத…

ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசியவியல் நிறுவனம் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இலிவர்பூல், இங்கிலாந்து ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018 ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! கட்டுரையாளர்களே! பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம்.     வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது.     “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப்…

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2018

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராசகோபால்) நினைவுச் சிறுகதைப் போட்டி (புரவலர்: அமரர் செம்பியன் செல்வன் குடும்பத்தினர்)   முதற் பரிசு: உரூ.5,000/- இரண்டாம் பரிசு: உரூ.3,000/- மூன்றாம் பரிசு:  உரூ.2,000/- ஏனைய ஏழு சிறுகதைகளுக்குப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும். போட்டிக்கான விதிகள்: சிறுகதைகள் முன்னர் எங்கும் வெளியிடப்படாதனவாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர்கள் தங்கள் பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைக்க வேண்டும். அஞ்சல் உறையின் இடப்பக்க மூலையில் ‘அமரன் செம்பியன்செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனக் குறிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:…