பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019

வைகாசி 12-14, 2050  / 26.05.2019-28.05.2019 பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி திண்டுக்கல்   வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா இணையத் தோழி, இந்தியா பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019 அறிவிப்பு மடல் கருப்பொருள் தமிழ்மொழியின் பன்முகத்தன்மை துணைக் கருப்பொருள் தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை,…

கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்  இலங்கை அரசின் தமிழின அழிப்பைத்  தமிழீழத்  தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித்…

சிக்காகோ: உள்ளூர் உரையரங்கமா? உலகத்தமிழ் மாநாடா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சிக்காகோ: உள்ளூர் உரையரங்கமா?உலகத்தமிழ் மாநாடா? 10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும்  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும் வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் அமெரிக்கா(சிக்காகோ)வில் நடக்க இருக்கிறது.  கருத்தரங்க அமைப்பாளர்கள் இது குறித்த அறிவிப்பைப் பரவலாக விளம்பரப்படுத்தி யுள்ளனர். பெதுவாக, ‘அகரமுதல’ இதழில் எக்கருத்தரங்கம் அல்லது மாநாடு குறித்துச் செய்தி வெளியிட்டாலும் நானும் அதன் பொறுப்பாளர்களில் ஒருவன் எனத் தவறாகக் கருதி விளக்கங்கள், விவரங்கள் கேட்பவர்…

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா                                      முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள்! பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்   தொடக்கவிழா : கொழும்புத் தமிழ்ச்சஙு்கம், கொழும்பு – வைகாசி 13, 2050 / 25.05.2019 நிறைவு விழா: நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அரச்சலூர், ஈரோடு ஆடி 01, 2050 / 27.07.2019   முனைவர் மு.கலைவேந்தன் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு 613 204 பேசி 04362 260711;  94867 42503;  mukalaiventhan@gmail.com

மொரீசியசில் இலக்குவனார் படத் திறப்பு

மொரீசியசு இலக்குவனார் தமிழ்ப்பள்ளியில் குறள்மலைக் குழு குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீசியசு நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் குறள்மலைக் குழு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டது.   இலக்குவனார் படத்தை திறந்து வைத்துப் பிரான்சு சாம் விசய் உரையாற்றினார்.  மேலும் பேராசிரியர் திருமலை(செட்டி), பேராசிரியர் சொர்ணம்,  தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல்முருகனார், திரு. கந்தசாமி திரு.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.   குறள் மலை பணிகளுக்காக மொரீசியசு நாட்டு அதிபர் மேதகு பரமசிவம் வையாபுரி அவர்களை அவர் மாளிகையில் குழுவினர் சந்தித்து உரையாடினர்….

இலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே! ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…

உதவிய உள்ளங்கள் – பேரரசி முத்துக்குமார்

உதவிய உள்ளங்கள்  “மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான்.      “இரு…இரு…இது என்ன ‘ஃபார்முலா 1’ வண்டியா? வேகமாக போவதற்கு?” என்றார் அவன் அப்பா அமுதன்.      திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது. அப்போது…. யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த…

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை

அன்பு நலஞ் சான்றீர், வணக்கம். எதிர் வரும் ஆனி 19-22  / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.  அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும், ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.  இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு; நாடு நாள் நேரம் தொடர்பு எண் அமெரிக்கா 1/30/2019  புதன்கிழமை     இரவு 09:00 முதல் (கிழக்கு நேரம் ) இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)   தொடர்பு எண்: 515-739-1519  கடவு எண்: 890386…

சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்

தை 15, 2050 செவ்வாய்  29.01.2019 மாலை 4.00 ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி பேராசிரியர் ஈசுவரி (எ) சொ சின் (Zhou Xin), (துறைத் தலைவர்,  தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா) தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார். வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக! முனைவர் சான் சாமுவேல் நிறுவன இயக்குநர் ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 பேசி: 9840526834 இணையத் தளம் :  www.instituteofasianstudies.com குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign…

உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு   32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா அன்புடையீர்  வணக்கம்.! வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத்  தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள்,…