விக்டர் இராசலிங்கத்தின் புத்தக வெளியீட்டு விழா, கனடா

புத்தக வெளியீட்டு விழா அன்புடையீர், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம்  சிரீதாசு பேச்சாளர்கள் : திரு கரி ஆனந்தசங்கரி…

போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை

போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை   போருக்குப் பிந்திய இரு நூல்கள் ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன் ‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர் வழிப்படுத்தல்:  தோழர் வேலு   உரைகள்:  தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன்   அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும் உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு) வழிப்படுத்தல்:  எம்.பௌசர்   காலம் –  சித்திரை 23, 2048 / 06 மே 2017 சனி…

‘முதல் மொழி தமிழே!’ – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு

‘முதல் மொழி தமிழே!’  – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு!   வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ‘உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!’ என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.   எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்பதின்மர்  தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு…

சிங்கப்பூரில் ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி

சிங்கப்பூரில் சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி   வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, திருச்சி சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை  சித்திரை 03, 2048 / 16-04-2017  அன்று, சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், “மானுடம் போற்றும் மாணவர்கள்” என்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.   சிங்கப்பூரில் தமிழ் மொழியை அடுத்த…

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:   பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு  குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார்.  “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா…

ஓவியக்கலை – விபுலானந்த அடிகள்

ஓவியக்கலை ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர். நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான…

வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்

  வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன்  குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற  முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன்  குறும் பட வெளியீடும்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்

  துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம் சித்திரை 09 /  ஏப்பிரல் 22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருக்கிறது. துபாய் அல்ராசு  பெருந்தொடரியகம் (Metro station) எதிரில் அமைந்துள்ள அல் அப்ரா பண்டுவ மனையில்(clinic) இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல்  மருத்துவம் தொடர்பான அறிவுரை வழங்கப்பட இருக்கிறது. பொது மருத்துவத்தில்  பட்டறிவு வாய்ந்த  மருத்துவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த  பல்மருத்துவர் நசிமா தலைமையிலான குழுவினரும்  …

இயித்தாவில் (Jeddah) இசுலாமியச் சிறப்புத் தமிழ்மாநாடு

  சவூதி அரேபியா  இயித்தாவில் (Jeddah)  சித்திரை 01, 2048 / ஏப்பிரல் 14  வெள்ளிக்கிழமை அன்று  இயித்தா இசுலாமிய அழைப்பகம் தமிழ்ப் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு  சிறப்பாக நடைபெற்றது.   நிகழ்ச்சியில்  கல்வியாளர்(மவுலவி) இப்ராகிம் மதனி, கல்வியாளர் அன்சார் உசைன் பிருதவ்வி, இசுமாயில்  சியாகி , கல்வியாளர் முசாகி  இபன்  இரசீன், கல்வியாளர் அப்துல் பாசித்துபுகாரி,  உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இசுமாயில் சலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாகக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன….

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக   கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது.  இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன