கனவல்ல தமிழீழம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கனவல்ல தமிழீழம்!  மெய்யாகும் நம்பிக்கை!   தமிழீழம் என்பது கனவல்ல!  நேற்றைய வரலாற்று உண்மை. நாளை நிகழப்போகும் உண்மை வரலாறு! போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளாக, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம்!   அது வெறும் கனவல்ல! அருந்தமிழ் உணர்வும்  அறிவுச் செம்மையும் அறிவியல்  புலமையும்  போர்வினைத்திறமும்  மாந்த நேயமும் பண்பு நலனும் கடமை உணர்வும் கொண்ட  ஈழத்தமிழர்கள் போர்க்களங்களிலும் பிற வகைகளிலும்  தம் உயிரைக்  கொடுத்ததன் காரணம் வெறும் கனவல்ல! பழந்தமிழர்கள் தனியரசாய் ஆட்சி …

பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

கார்த்திகை 11,  தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954 அன்று தமிழாய்ப்பிறந்த தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன்  பிறந்த நாள் பெருமங்கலம்! தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் வீரம். தமிழ் என்றால் அன்பு.   தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன். பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம்  தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது! தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த்…

“தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” : பேராசிரியர் சு. பசுபதி

     ஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016  உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார்.   இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன்.  அரிய நுணுக்கமான…

செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி     அபுதாபி அரோரா  நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு  வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி  சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல  முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின்…

மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)

மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)   மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.   கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. குறித்த…

புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்

புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973)   1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம். உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.   உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர் அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின்…

முற்றுப்புள்ளி – கா.உயிரழகன்

முற்றுப்புள்ளி – கா.உயிரழகன் வரவை அழிக்கும் செலவுக்கும் கூட குடியை அழிக்கும் குடிக்கும் கூட உடலை அழிக்கும் புகைக்கும் கூட உறவை அழிக்கும் கெட்டதிற்கும் கூட பண்பாட்டை அழிக்கும் பழக்கத்திற்கும் கூட ஒழுக்கம் இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே! முரண்பாடுகள் முளைக்காமல் இருக்கக் கூட முறுகல்கள் தோன்றாமல் இருக்கக் கூட மோதல்கள் தொடராமல் இருக்கக் கூட முறிவுகள் மலராமல் இருக்கக் கூட சாவுகள் நிகழாமல் இருக்கக் கூட அமைதி இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே! நட்புகள் நலமாக அமையத் தான் உறவுகள் அன்பாக இணையத் தான் காதலும்…

ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’

  பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம்     பருமாவில்  தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன்.   அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து  கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன்.   பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…

நட்சத்திரப் பொறியாளர் விருது பெற்றார் வித்தியாசாகர்!

  குவைத்து எண்ணெய்வள நாட்டில் அமைந்துள்ள நமது தமிழர்களின் அமைப்புகளில் தொழில்சார்ந்த அமைப்பான ‘தமிழ்நாடு பொறியியல் குழுமம்‘ சால்மியா எனும் நகரிலுள்ள “தி இரேடிசன் ப்ளு” உயர்தர நட்சத்திர விடுதியில் 02.11.2016 அன்று   நட்சத்திரப் பொறியாளர் விருது வழங்கும் விழாவினை எடுத்து நடத்தியது. ‘குவைத்து எண்ணெய் நிறுவனத்தின் முதன்மைத் தலைமை அதிகாரி (CEO of KPC) முன்னிலை வகித்தார்.    உலகத்தர வரிசையில் பல முன்னிலை நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது த.பொ. குழுமம்.  …