சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6

(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு   முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்:  மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  இலவா, குசா இருவரும் குதித்தோடிச்…

வருங்கால மரபினரும் தமிழ்க்கல்வியும் – கருத்துப்பரிமாற்ற ஒளிப்பதிவு, இலண்டன்

வருங்கால மரபினரும் தமிழ்க்கல்வியும் கருத்துப் பரிமாற்றம் உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் இலண்டன் ஒளிப்பதிவு வைகாசி 09, 2046 மே 23, 2015  

‘தமிழாடல்’2015

‘தமிழாடல்‘2015 சிடிவி(GTV’) தமிழாடல்’2015 என்ற மாபெரும் தமிழ்ப்பேச்சுப் போட்டியொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். மேடையில் தமிழ் பேசும் கலை அருகிவருகின்ற காலக்கட்டத்தில், மேடைப்பேச்சை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், அடுத்த தலைமுறையினர் தமிழில் மேடையில் பேசுவதற்கு ஆர்வத்தைத்தூண்டும்   நோக்கத்துடனும், இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகின்றது.  இந்த நிகழ்ச்சியில், (1) 10 அகவைக்குட்பட்டவர்களை கீழ்ப்பிரிவாகவும், (2) 11 அகவை முதல் 16 அகவை வரை உள்ளவர்களை மத்தியப் பிரிவாகவும், (3) 17 அகவை முதல் 25 அகவை வரை உள்ளவர்களை மேற்பிரிவாகவும், என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் 3…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 5

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி ஐந்து இலவா, குசா, இராமன் முதல் சந்திப்பு இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை. பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, இராமன், சீதா.துறவக மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் இலவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா, இலவா கைக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதனைக் காயப்படுத்தி முடமாக்கினான். களங்கமற்ற சிறுவரைக் கண்டு வல்லமைமிக்க அனுமான் படையினர்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

அனைவருக்கும், வணக்கம் ! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம். நாள்: வைகாசி 03, 2046 /  05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை  நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்) [இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165] – தரவு :  நாஞ்சில் பீட்டர்

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு : நிறைவு – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?)   முன்சொல்    16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே “மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)” என்ற கையேடு….

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 தொடர்ச்சி – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 தொடர்ச்சி (புத்தக வெளியீட்டு முயற்சி-3)   ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும்.    எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் என்றி ஓஎனிகுசுவால்டு (Henry…

பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி “தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்”- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை சித்திரை 11, 2046 / ஏப்பிரல் 24, 2015 அன்றுநடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் கணினிகளில் தமிழின் அறிமுகத்தைப் பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மறைந்த திரு நா.கோவிந்தசாமி, இணையத்திற்கு தமிழை அறிமுகப்படுத்தியது நினைவுகூரப்பட்டது. [மென்பொருட்ளைக் கொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் எப்படி என்பதைப் பற்றி மாணவர்கள் உரையாற்றுகின்றனர்.]…