தூறலின் தமிழ் மழை
தூறலின் 5ஆவது ஆண்டை முன்னிட்டு, பெருமையுடன் வழங்கும் கவிப்பேரரசு முனைவர் வைரமுத்து கலந்து சிறப்பிக்கும் “தூறலின் தமிழ் மழை”.
மெய்வல்லுநர் போட்டி 2014
மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…
வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா
குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது. (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர். விழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி…
செருமனியில் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்!
செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு (International Zentrum – Flachs Markt– 15. 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த) பன்னாட்டு மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா தான்லி, திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்றத் தொடங்கியது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்…
“அர்ச்சனைமலர்கள்” கவிதை நூல்வெளியீட்டு விழா –செருமனி
செருமனிவாழ் எழுத்தாளர் திருமதி. செயா நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘அர்ச்சனைமலர்கள்’ கவிதை நூல் வெயியீட்டுவிழாவும், இலண்டன் தமிழ் வானொலியின் 127ஆவது பொன்மாலைப் பொழுது நிகழ்வும் ஒரே மேடையில் இரு நிகழ்வுகளாகச் சிறப்புடன் நடந்தேறின. செந்தமிழின் இனிமையும் பெருமையும் என்றும் மண்ணோடு மண்டியிட்டுக்கிடந்து மணம் வீசும் தமிழ் மலர்களை உருவாக்கும் பைந்தமிழ்ப்பாசறையாம் நெடுந்தீவு மாமண்ணில் பிறந்து பார் முழுவதும் புகழ் மணம் கமழும் அறிவுசார் குடும்ப வரலாற்றின் சாதனைப்பெண்ணாய், தெள்ளுதமிழ் பெருக்கெடுக்க அள்ள அள்ளக்குறையாத ஆச்சரியத்திறமைக்களஞ்சியம் திருமதி.செயபாக்கியம் யூட் நடேசன்(ஜெயா நடேசன்) அவர்களின் அன்பு நினைவலைகளை…
சார்சாவில் நடைபெற்ற ‘நிரித்யசமர்ப்பண்’ – இந்திய மரபு நடன நிகழ்ச்சி
சார்சாவில் ‘டிடிஎசு நிகழ்வுகள்’ சார்பில் ‘நிரித்யசமர்ப்பண்’ எனும் இந்தியமரபு நடன நிகழ்ச்சி வைகாசி 30, 2045 / 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை சார்சா அமெரிக்கப் பல்கலைக்கழக கலையரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது. நிகழ்விற்கு ‘டிடிஎசு நிகழ்வுகள்’ தலைவி செயந்தி மாலா சுரேசு தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குரு கவிதா பிரசன்னா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார். வள்ளி திருமணம் நிகழ்வினை நேர்த்தோற்றம்போல் நடித்துக் காட்டிய மாணவியரின் நடிப்பனை அமீரகத்திலிருந்து விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்தியத் துணைத் தூதர் அசோக் பாபு வெகுவாகப்…
(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!
முதன் முதலாக உலகத் திருக்குறள் மாநாடு! இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…
தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை
சிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம் இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான தேவையையும்…
தென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2014
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தென்மார்க்கில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாலதி தமிழ்க்கலைகூடம் தமிழ் மொழியைக் கற்பித்துவருகிறது. வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிக்கான புலன்மொழி வளத்தேர்வு 01-06-2014 அன்றும் எழுத்துத் தேர்வு 07-06-2014 அன்றும் தென்மார்க்கின் பல பகுதிகளிள் நடைபெற்றது. இத்தேர்வு தென்மார்க்கிலுள்ள 16 தேர்வுநிலையங்களில் நடைபெற்றது. இத்தமிழ்மொழித் தேர்வுக்கு 900 மேற்பட்ட மாணவர்கள் தோற்றினார்கள். இவர்கள் யாவரும் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதினார்கள்.
யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ! ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !! இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது?