வீரமாமுனிவரின் ‘கிளாவிசு’ நூலின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
தை 27, 2047 / 11 பிப், 2016இல் ஏலாக்குறிச்சியில் கருத்தரங்கும் நூல்வெளியீட்டு விழாவும் நடைபெறஉள்ளன . ‘கிளாவிசு’ என்னும் இலத்தீன் சொல் சாவியைக்குறிக்கும்; உயர்தமிழ்இலக்கியத் திறவுகோலாக இப்பெயரில் வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதிய சிறந்த தமிழ்இலக்கணம்; இதனை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. முதுமுனைவர் ச. இராசமாணிக்கம் என்ற துறவி ஆங்கிலத்தில் பெயர்த்தார். வெளிவரவில்லை. நான் தமிழில் எழுத்ததிகாரம் மட்டும் ஆய்வுரையுடன் மொழிபெயர்த்துள்ளேன். இந்நூல் அன்று வெளியிடப்பெறுகிறது. கருத்தரங்கில். மூதறிஞர் செ வை சண்முகம், முனைவர் பா வளனரசு, முனைவர் திலகவதி,…
திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா
தனித்தமிழ் இயக்கம் 100 மொழிப்போர் 50 மொழிஞாயிறு பாவாணர் 114 தலைமை: முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார் நன்றியுரை: கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் அழைத்து மகிழ்நர் : தலைவர் :அருள்வேந்தன் பாவைச்செல்வி செயலர்: கே.கே.சா பொருளர் : சி.எசு.துரை
சேதுக்காப்பியம் 7ஆம் காண்டம் வெளியீட்டு விழா, சென்னை
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படைப்பாக்கமான சேதுக்காப்பியம் 7 ஆம் காண்டம் நூல் வெளியீடு தை 25, 2017 / பிப்.09,2016 மாலை 5.30 சென்னை 600 005 தலைமை : அறிஞர் ஔவை நடராசன் தொடக்கவுரை: பேரா.மறைமலை இலக்குவனார் நூல் வெளியிடுநர்: பேரா.அ.இராமசாமி
கி.சிரீதரன் சொற்பொழிவு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு
தமிழ் மரபு அறக்கட்டளை சொற்பொழிவு : கி.சிரீதரன் தலைப்பு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு தை 23, 2047 / பிப். 06, 2016 ஆர்.கே. மரபு மையம்Arkay Convention Center), 146/3, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004 தலைப்பு பற்றி: ஒரு நாட்டின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை தொல்லியல் ஆய்வுகள். தொல்லியல் என்னும் பெரும் பிரிவில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பண்டைய காசுகள், அகழாய்வு, சிற்பம்/ஓவியம்/திருமேனி அடங்கிய நுண்கலைகள், கட்டடக்கலை போன்றவை…
சத்தியவான் வாய்க்காலைக் காப்பாற்றும் கூட்டம்
சத்தியவான் வாய்க்காலைக் காப்பாற்றும் கூட்டம் தை 25, 2047 / பிப்.08, 2016 மாலை 4.00 ஆறுபாதி
கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – தி்ரைப்படம்
தை 23, 2047 / பிப்.06, 2016 சென்னை
சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப் பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை. தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்களப் படை. தமிழனுக்குக் குரல் கொடுப்பதாக வேடம் போடும் இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையின் சிறுவர்களுக்கான…
ஊர்ச்சந்தை, சென்னை
தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை – 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும். ஊர்ச் சந்தை…
மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்
மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும் பாடம் 2 • ஐம்பூதக்…
சங்கம் 4 : வெள்ளப்பேரிடர்தடுப்பு உரையரங்கம்
அறிவு மறுமலர்ச்சியே சமூக – அரசியல் மாற்றத்திற்கான விசை, தமிழர் அறிவு மறுமலர்ச்சிப் பேரியக்கம் தை 20, 2047 முதல் தை 24, 2047 வரை பிப்பிரவரி 03, 2016 முதல் பிப்.07 2016 வரை இராசரத்தினம் கலையரங்கம், சென்னை
நிறை இலக்கிய வட்டத்தின் ஐந்தாம் ஆண்டு கம்பர் விழா
கவிமாமணி இளையவன் ஐதராபாதில் பல ஆண்டுகளாக ‘நிறை இலக்கிய வட்டம்’ நடத்தி வருகிறார். இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன். என்னுடைய 17ஆவது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன். இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது. முழுநாள் விழா. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். நாளின் இறுதி நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது. ‘கம்ப காவிய மேன்மைக்குப்…
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்
அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்! என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
