நிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்
ஒரு புறம் தமிழ்நாட்டில் தொழிலகங்களில் அயலவர் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டு உள்ளது. மறு புறமோ தமிழ்நாட்டவர்கள் முதலீடுகள் அயலகங்களுக்குத் திருப்பிவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது. தமிழகக் கருநாடக எல்லையில் உள்ள சாம்ராசு நகர் மாவட்டத்தில், 1,400 காணியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20.01.14 அன்று ‘சாம்ராசு நகர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. கருநாடகத் தொழில் வணிக அவைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின்…
தமிழர்திருநாளா? மகர சங்கராந்தியா? திராவிடர் திருநாளா?
உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதிலே ஐயமில்லை. இந்திய நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தமையால் இன்றைய இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. (தமிழோடு தொடர்புடைய சப்பான் முதலான ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.) ஆனால், அவ்வாறு கொண்டாடப்படும் இடங்களில் பேசும் மொழியும் சிதைந்து உருமாறிப் புது மொழியானமையால், அங்கே பொங்கல் நன்னாளின் பெயர் சங்கராந்தி அல்லது சங்கிராந்தி, உத்தராயண், (உ)லோரி, மகரவிளக்குத் திருவிழா, மாகி, மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்பனபோல் …
அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!
தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600 இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…
