வெருளி நோய்கள் 811-815: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 806-810: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 811-815 குடிநீர் ஊற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிநீர் ஊற்று வெருளி.சீன மொழியில் shui என்றால் தண்ணீர் எனப் பொருள்.“Yinshui” என்றால் தண்ணீர் குடிக்க என்று பொருளாகும்.நீர் வெருளி உள்ளவர்களுக்குக் குடிநீர் ஊற்று வெருளி வரும் வாய்ப்புள்ளது.00 போதைநீர்களைக் குடிப்பது தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் குடிப்பு வெருளி.குடிப்பு என்பது மதுவகைகளைக் குடிப்பதைக் குறிக்கிறது. மதுப் பழக்கத்தைக் கைவிடாமல் அதே நேரம், குடிப்பழக்கம் தொடர்பில் அளவுமீறிய பேரச்சம் கொள்வதே இது.குடிப்பழக்கத்தின் தீமைகளை அறிந்தே குடித்துக்கொண்டு அதற்கு…
நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: தொடர்ச்சி) கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்செல்லாது வைகிய வைகலும், – ஒல்வகொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்படாஅவாம் பண்புடையார் கண் நாலடியார் பாடல் 169 பண்புடையவ ர்கள் படிக்காமல் இருக்கும் நாள் இல்லை;பெரியவர்களிடம் சென்று பழகாத நாள் இல்லை; தன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காத நாள் இல்லை. பதவுரை: கல்லாது=கற்க வேண்டிய நூற்களைக் கற்காது; போகிய=போன; நாளும்=நாள்களும்; பெரியவர்கண்=பெரியோரிடத்து; செல்லாது= போகாது; வைகிய=இருந்த; வைகலும்= நாள்களும் ஒல்வ=முடியக்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 13 இடைச்செருகல்கள் இருவகை இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக்…
வெருளி நோய்கள் 806-810: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 801-805: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 806-810 குச்சிப் பனி மீதான மிகையான பேரச்சம் குச்சிப் பனி வெருளி .இதனை உருவாக்கும் நிறுவனப் பெயரில் பாப்புசிக்கில் வெருளி என்றும் சொல்வதுண்டு.00 குடல் செயல்பாடு தொடர்பான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் குடலியக்க வெருளி.Defecalgesiophobia என்றால் குடல் நோவு வெருளி எனலாம். எனினும் ஒத்த பொருளை இருவகையாகச் சொல்வதை விடக் குடலிறக்க வெருளி என்றே அழைக்கலாம்.de என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் இருந்து / இடத்திலிருந்து/முதலாக முதலியன. fec என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடலினின்றும்…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 149 & 150 ; நூலரங்கம்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 149 & 150 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 கார்த்திகை 28, 2056 ஞாயிறு 14.12.25 காலை 10.00 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…
வெருளி நோய்கள் 801-805: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 796-800: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 801-805 கிறுகிறுப்பு தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கிறுகிறுப்பு வெருளி.நீர்ச்சுழற்சி அல்லது தலை சுற்றல் தொடர்பான பேரச்சத்தையும் குறிக்கும்.இரண்டிற்கும் பொதுவான சுழற்சி அடிப்படையில் முதலில் சுழற்சி வெருளி எனக் குறித்திருந்தேன். நீர்ச்சுழியாகிய நீர்ச்சுழற்சியைப்பார்க்கும் பொழுது தலை கிறு கிறு எனச் சுற்றுவதால் அல்லது தலை சுற்றும் என அஞ்சுவதால் வரும் பேரச்சத்தைத்தான் இது குறிக்கிறது. எனவே சுற்றல் வெருளி என்பதை விட கிறுகிறு வெருளி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனைக் குறித்துள்ளேன்.கிறுகிறுப்பு வரும்…
வெருளி நோய்கள் 796-800: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 791-795 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 796-800 கிறித்துப் பிறப்பு நாள் குறித்த பேரச்சம் கிறித்துநாள் வெருளி. கிறித்துப்பிறப்பு(கிறித்துமசு) கொண்டாட்டங்கள் குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் சிறாருக்கே மிகுதியாக வருகிறது.கிறித்துப் பிறப்பு வெருளி என்றால் கிறித்து பிறந்தது குறித்த பேரச்சம் என்றாகிறது. கிறித்துப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பேரச்சத்தைத்தான் இங்கே குறிக்கிறது. எனவே, சுருக்கமாகக் கிறித்து நாள் என்பது சரியாக இருக்கும்.00 கிறித்துப்பிறப்பு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி.கிறித்து நாள் வெருளி உள்ளவர்களுக்குக் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி வரும் வாய்ப்பு…
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 ****** பிறர் நலத்திற்காக வாழ்க! பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணிப் போகிய நற்றிணை 186 : 8-9 பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன். முழுப் பாடல்: கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கிஇரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டுபெருங்கை யானை பிடியெதிர் ஓடும்கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடைவேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5பாண்யாழ்…
வெருளி நோய்கள் 791-795: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 786-790: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 791-795 கிழக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி. கிழக்கே பயணம் செய்தால், கிழக்குத் திசையில் எதையும் செய்தால் தீமை நிகழும் என்ற பேரச்சம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நாள், சில கோள்களின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்த நாளில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்பது கணிய/சோதிடப் பித்தர்களின் நம்பிக்கை. இந்தியாவில் கணிய(சோதிட)ப் பற்றர்கள், திங்கட் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் கிழக்குத் திசையில் பயணம் செய்ய மாட்டார்கள். இதனைக் ‘கிழக்கே…
வெருளி நோய்கள் 786-790: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 781-785 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 786-790 கிண்ண வெதுப்பம்(muffin) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண வெதுப்ப வெருளி.உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. கிண்ணவெதுப்பன்(The Muffin Man) மழலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட திகில் தொடரில் எதிராளராக வருபவன். சிலர் இதனை அதனடிப்படையில் கிண்ண வெதுப்பன் வெருளி என்கின்றனர்.கிலி வெருளி உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்பன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 கிராண்டு தாம்பசன்(Grant Thompson)என்னும் இளைஞர் மீதான அளவுகடந்த பேரச்சம் கிராண்டு தாம்பசன் வெருளி.நேர்ப்பு மன்னர் வெருளி(The…
குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! – தொடர்ச்சி) சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இரு! சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451) பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும். பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்; பெருமை-பெருமைப் பண்பு; சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும். பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச்…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7 செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு…
