இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 42 : பழந்தமிழும் தமிழரும் 2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும்.1 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 2  தமிழ்மொழி, முண்டா திராவிடம் ஆரியம் என்னும் மூன்றினாலும் உருவாயது என்று வையாபுரிப்பிள்ளை கூறுகின்றார். (It is clear that the Tamil Language is a Composite texture of three elements, viz, the Munda, the Dravidian and Aryan, the Dravidian elements predominating. History of Tamil language and literature-Page 5) வையாபுரியார் கருத்துப்படி, தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பது…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும் 1.

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) 10. பழந்தமிழும் தமிழரும்  மக்களைப் பிரிவுபடுத்துகின்றவற்றுள் மொழியே பிறப்பொடு வந்து இறப்பொடு செல்வதாகும். ஏனைச் சமயமும் சாதியும் நிறமும் பொருள் நிலையும் பதவியும் இடையில் மாற்றத்திற்குரியன. உலகில் உள்ள மக்கட் கூட்டத்தினருள் பெரும் பகுதியினர் மொழியாலேயே வேறு படுத்தப்பட்டு அழைக்கப்படுகின்றனர். மொழியால் மக்களினம் பெயர் பெற்றதா? மக்களினத்தால் மொழி பெயர் பெற்றதா? எனின், தமிழர்களைப் பொறுத்தவரை மொழியால்தான் மக்களினம் பெயர் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்குரியவர் ஆதலின் தமிழர் எனப்பட்டனர். தமிழ் என்றாலும் தமிழர் என்ற…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 40 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி   சில வேர்ச்சொற்களில் மூல உயிர் மாறுவதனால் சொல்வடிவம் வேறுபட்டுப் பொருள் வேறுபாட்டை  அறிவிக்கும். குறில் நெடிலாகவோ, நெடில் குறிலாகவோ மாறுதலைடையும்.        மின் என்பது மீன் என்று ஆகியுள்ளது.        காண் என்பது கண் என்று ஆகியுள்ளது.        கெடு என்பது கேடு என்றும், உண் என்பது      ஊண் என்றும் வந்துள்ளமை காண்க.                தன்மை முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 39  பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி   வினைச்சொல் தன்மையை  அடையுங்கால் காலம் காட்டும் உருபைப் பெறவேண்டியுள்ளன. பகுதியுடன் கால எழுத்தும் சேருங்கால் அவை இரண்டையும் பொருந்தச் செய்ய வேறொரு  எழுத்தும் வேண்டப்படுகின்றது. நினை இறந்த காலத்தை அறிவிக்குங்கால் நினைந்து என்று உருப்பெறுகின்றது. த் இறந்த காலம் காட்டுவது. அதனைப் பகுதியுடன் இணைக்க ந் வேண்டியுள்ளது. ஆனால் எதிர்கால எழுத்தை இணைக்குங்கால் அதுவே இரட்டித்து விடுகின்றது.  நினை+ப்+ப=நினைப்ப.   முற்றுச் சொல்லாகுங்கால் அச்சொல் திணை,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு தொடர்ச்சி

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 38 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி   இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு ஏற்றம் தரும் நோக்கோடு உட்பிணைப்பு மொழியே உயர் நாகரிகத்தைக் காட்டும் என்று கூறியதை அறிஞர் உலகம் ஏற்காது.   தமிழ்மொழி ஒட்டுநிலைக்குரியதாகக் காணப்படுவதால் தமிழர் நாகரிகத்தால் தாழ்ந்தவர் என்று கூறிவிடுதல் பொருந்தாது. தமிழில் ஒட்டுநிலையும் உள்ளது; உட்பிணைப்பு நிலையும் உள்ளது. தெளிவான முறையில் பொருளை விளக்கவும் சொற்களை உருவாக்கவும் துணைபுரிவது ஒட்டுநிலையேயாகும். தெளிவுக்கும் எளிமைக்கும் இனிமைக்கும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 37 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு  மொழி சொற்களால் ஆயது. மொழிக்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.        ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி        இரண்டிறந்து இசைக்கும்  தொடர்மொழி யுளப்பட        மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே        (தொல்காப்பியம், மொழி-12) என மொழி தோன்றியுள்ள நெறியே சொற்களால்தான் என்று ஆசிரியர் தொல்காப்பியர் ஆராய்ச்சி பொருந்தக் கூறியுள்ளார். மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைக் கொண்டே மொழிகளை வகைப்படுத்தியுள்ள முறைமையும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  36 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி   இன்றுள்ள இந்திய மொழிகளுள் ஆரியம் ஒழிந்த பிறவெல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியங்களைப் பெற்றுள்ளன.   வட இந்திய மொழிகள் எனப்படுவன அசாம் மொழி, வங்காள மொழி, குசராத்தி மொழி, காசுமீரி மொழி, இந்தி மொழி, மராத்தி மொழி, ஒரியா மொழி, பஞ்சாபி மொழி, உருது மொழி என ஒன்பதாம்.   அசாம் மொழியில் இலக்கியம் என்று கூறத்தக்கதாய்த் தோன்றியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான்.  …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 34 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  35 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் – தொடர்ச்சி  பத்து வகைக் குற்றங்கள்பற்றிக் கூறும் நூற்பாவும் முப்பத்திரண்டு உத்திவகைகளைப்பற்றிக் கூறும் நூற்பாவும் இடைச்செருகல் வகையைச் சேர்ந்தன என்பது தெள்ளிதின் அறியக்கூடும்.         இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு         அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்         காமக் கூட்டம் காணுங் காலை         மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்         துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே         (தொல்.பொருள்-92) எனும் களவியல் முதல் நூற்பாவில் மறையோர் தேஎத்து…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 34: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் தொடர்ச்சி  

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  34 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி   இச் சொல் பயின்றுள்ள குறுந்தொகைப் பாட்டு, கொல்லன் அழிசி என்பவரால் பாடப்பட்டதாகும். இவர் ஆரியர் வருகைக்கு முற்பட்டுள்ள காலத்தைச் சேர்ந்தவராவார். இவர் பாடல்கள் நான்கு. நான்கும் குறுந்தொகை யினுள் உள்ளன. தோகை பயின்றுள்ள பாடலாவது:-         அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை         மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை         பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்         தகாஅன் போலத் தான்தீது மொழியினும்         தன்கண் கண்டது பொய்க்குவ…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  33 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்  ஒரு மொழியின் பழமையை அம் மொழியின் சொற்களே அறிவிக்கும். தமிழ் மொழியின் பழமையைத் தமிழ்ச்சொற்களே அறிவிக்கின்றன. சொற்கள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் இடம்பெற்று நிலைத்திருக்குமேல் அவை தம் பழமையை அறிவிக்க வல்லன. தமிழ்மொழிச் சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் வெளிநாட்டார் வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. அங்ஙனம் இடம்பெற்று நிலைத்துள்ள சொற்கள் தமிழின் பழமையை உணர்த்த வல்லனவாய் உள்ளன.   அறிஞர்  காலுடுவல் அவர்கள் இத் துறையில் ஆராய்ந்து பல தமிழ்ச்சொற்கள் மேலை நாட்டு…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  32  சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர்.  தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை,         முதலிற் கூறும் சினையறி கிளவியும்         சினையிற் கூறும் முதலறி கிளவியும்         பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும்         இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்         வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ        …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 31 அவை சொற்கள் சேருங்கால் அவற்றைச் சேர்ப்பதற்குத் துணைபுரிவன, வினைச்சொல்லில் காலத்தைக் காட்டி நிற்பன, வேற்றுமை அறிவிக்கும் உருபுகளாகி வருவன, அசைகளாக நிற்பன, இசை நிறைத்து நிற்பன, தத்தம் குறிப்பால் பொருள் தருவன, ஒப்பில் வழியால் பொருள் செய்குந என எழுவகைப்படும். இவை சொற்களாக உருவாகி நிற்றல் மட்டுமன்றி, சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும். தம் ஈறு திரிந்தும் வரும்;  ஓரிடைச் சொல்லை அடுத்தும் வரும்.   சொற்றொடர்களில்  நின்று பலவகைப் பொருள்களை அறிவிக்கும்…