தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 அணுக்க இணைய வழிக் கூட்டம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம் தலைவர் : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர்,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 1/3 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3 ஆங்கிலம் இன்று உலகப் பொது  மொழியாகக் கருதப்படும் நிலையை அடைந்துள்ளது. ஆங்கிலேயரை இந் நாட்டினின்றும் விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை விடமாட்டோம் என்று உறுதிபூண்டுள்ளனர். இந்தியர்க்கு ஆங்கிலமே கண்ணும் காதும் என்று கருதுகின்றனர் பலர். உலக மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்துக்கு உரியவராய் இருக்கின்றனர். . (English – speaking people constitute about one tenth of the world’s…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 1/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 11. தமிழ் மறுமலர்ச்சி   தமிழ் என்று தோன்றியது என்று காலவரையறை செய்ய முடியாது; அது உலக மொழிகளின் தாய் என்று சொல்லக்கூடியது; இந்திய மொழிகளின் தாய் என்று எளிதே  நிலைநாட்டப்படும் பெருமையை உடையது. இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும், அதனின் இனிமைப் பண்பாலும், எளிமை அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக் கூடியது. தமிழைக் கற்கத் தொடங்கி அதன் சுவையை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 10   களவொழுக்கத்தின்கண் மகளிருடன் விளையாட்டும் விழாவும் நீங்கிய வாழ்வு தலைவனுக்கு இல்லை என்பது இதன் பொருளாகும். பழந்தமிழில் மகளிர் விளையாட்டைக் குறித்த ஓரை என்ற சொல் தொல்காப்பியர் காலத்தில் ஆடவர் மகளிர் எனும் இரு சாரார் விளையாட்டுக்குரிய பொதுச் சொல்லாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். மொழியியலில் சொற்பொருள் விரிதல் எனும் முறையாகும் இது.  இவ்வாறு விளையாட்டைக் குறித்துநின்ற ஓரை என்ற  தூய தமிழ்ச்சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தீய…

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி மொத்தம் 18 பரிசுகள்  சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /,  & மூன்றாம்  உரூ.2000/ நான்காம்  பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-) ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-) கட்டுரைப்போட்டியின் தலைப்பு: இந்தி,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 9    ஈ யென இரத்தலை இழிவாகக் கருதிய பழந்தமிழ் நாட்டில் பிச்சை என்ற சொல் தோன்றியிருத்தல் கூடுமா என்று சிலர் ஐயுறக்கூடும். ஈ என இரத்தல் இழிந்ததுதான். ஆனால், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தது. பழந்தமிழர் வாழ்வு ஈதலும் துய்த்தலும் அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். ஆதலின், ஈதல் நிகழக், கொள்வோர் இருந்துதானே ஆக வேண்டும். கொள்வோரின்றிக் கொடுப்போர் யாது செய இயலும்?…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 8 சிறந்தோரைப் பாராட்டிப் புகழ வேண்டா என்று கூறவில்லை. வியத்தல் வேண்டா என்றுதான் கூறுகின்றார். வியத்தல் என்றால் அளவுக்கு மீறி இல்லாத சீர்மைகளை இருப்பதாகப் புகன்று உயர்த்துதல். அதுதான் வேண்டா என்கிறார். அதனினும் ஒருவரைப் பதவியில் புகழில் பொருளில் சிறியவரென்று இகழ்தல் மிகக் கொடியது. ஆகவே இகழ்தலும் வேண்டா என்கிறார். வியந்து போற்றினாலும் போற்று; ஆனால் இகழ்ந்து விடாதே என்பதுதான் அவர் அறிவுரை. தம் இயல்பு கூறுவார்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 7   ஆனால், இன்றைய நிலைமை என்ன? பிசிராந்தையார் கூற்றுக்கு மாறுபட்டன்றோ இருக்கின்றது. இளமையிலேயே நரைபெற்று முதுமையடைந்து விடுகின்றோம். ஏன்? யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் 6

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 6   உவமை நயந்தான் என்னே! இவ்வளவு பொருத்தமாக யாராலும் கூறமுடியாது. வந்து அகப்பட்டுக் கொண்டால் புலியின் மீது விழுந்த குருடன் போன்றவன் என்பதில் எவ்வளவு பொருட் செறிவு இருக்கின்றது. பகைவனைக் குருடனாக்கிக் தன்னைப் புலியாக்கிக் கொண்ட சிறப்புதான் என்ன! அன்றியும் புலியிடம் வலியச் சென்று மாள்வது போலத் தன்னிடம் வலியப் போருக்கு வந்ததனால் மாளுகின்னான் என்பதும் வெளிப்படுகின்றது. அழிப்பதின் எளிமையை விளக்க அழகான உவமை. யானைக் காலில் அகப்பட்ட…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் 5

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 5 குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாய்க்கு உரிய பெரும் பொறுப்பாக இருந்துளது. அப் பொறுப்பை அக்காலப் பெண்டிர் நன்கு உணர்ந்திருந்தனர்.  நாம் என்ன பிள்ளைபெறும் எந்திரமா? என்று வெறுத்து மணவாழ்க்கையை விட்டுவிடவில்லை. அப் பொறுப்பை உணர்ந்த அன்னையொருத்தி மிகப் பெருமையுடன் கூறிக்கொள்ளுவதை நோக்குங்கள்.             ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே             சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே             வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே             நல்நடை நல்கல் வேந்தற்குக்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் 4

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 4   பெண்களுக்கு அக்காலத்தில் எல்லா உரிமைகளும் இருந்தன. விரும்பிய கணவனை மணக்கும் உரிமையும் இருந்தது. மணவினைச் சடங்குகளும் நிகழ்ந்தன. மணவினை நிகழ்வதற்கு முன்னர்ச் சிலம்புகழி நோன்பு என்ற ஒரு சடங்கு நிகழ்ந்துளது. அது மணமகன் வீட்டிலோ மணமகள் வீட்டிலோ நடைபெறும். அச் சடங்கில் புரோகிதர்களோ பொருள் விளங்கா மந்திரங்களோ இல்லை. பெண்களே நடத்தி வைத்தனர்.   அத் திருமணச் சடங்கு பற்றி நல்லாவூர் கிழார் கூறியுள்ளார்.            …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 42 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 3  மக்கள் பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழ்ந்துள்ளனர். முதியோர் கையில் கொண்டிருந்த கோலே தொடித்தலை விழுத்தண்டு என்று கூறப்படுகின்றது. அத் தண்டினைக் கொண்டிருந்த முதியோர் தம் கடந்த கால வாழ்வை நினைந்து இரங்குகின்ற முறையில் பாடப்பட்டுள்ள பாடல் பல முறை படித்துச் சுவைக்கத் தக்கது.             இனிநினைந்து இரக்க மாகின்று; திணிமணல்             செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்             தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து             தழுவுவழித் தழீஇத்…