தமிழ் பிரபாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வைகோ வேண்டுகோள்
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகச் செய்தியாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகத் தலைமையாளருக்கு வெள்ளிக்கிழமை தொலைநகலி(ஃபேக்சு) மூலம் அனுப்பிய மடலில் அவர் கூறியிருப்பதாவது: “சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கைப் படையினரால் தளையிடப்பட்டுள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண அவை உறுப்பினர்…
தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!
இலங்கைக்குச் சுற்றுலா புகவுச் சீட்டு பெற்று இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும் வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு என்னும் ஊரில் தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…